Friday 3 May 2024

தத்துவத்தின் தொடக்கம்

 

தத்துவ ஆராய்ச்சியின்‌ அடிப்படைகளைக்‌ கற்பதற்கு மிகச்‌சிறந்த வழி, முற்காலத்தில்‌ தத்துவச்‌ சிக்கல்களுக்குத்‌ தத்துவ ஞானிகள்‌ என்ன விடைகள்‌ அளித்தார்கள்‌ என்பதைத்‌ தெரிந்து கொள்வதே யாகும்‌. அவர்களுள்‌ பலர்‌ திருப்திகரமான விடைகள்‌ அளிக்கத்தவறி யிருக்கலாம்‌. தத்துவ ஆராய்ச்சியின்‌ தன்மையையும்‌போக்கையும்‌ விளக்குவதில்‌ ஏற்படும்‌ வெற்றிகளைப்‌ போலவே தோல்விகளும்‌ பயனுடையனவாகும்‌. இவ்வகையில்தான்‌ தத்துவ ஆராய்ச்சியில்‌ தத்துவ வரலாற்றுப்‌ பயிற்சி பொருளுடையதாகிறது, என்று மனிதனுடைய அறிவு தோன்றியதோ அன்றே தத்துவ ஆராய்ச்சியும்‌ தோன்றியது. எவ்வளவு எளிய தொடக்க நிலையிலிருந்தாலும்‌ பழங்காலத்திலிருந்தாலும்‌ எந்தச்‌ சமூகமும்‌ தத்துவ ஆராய்ச்சியில்‌ ஈடுபடாமவில்லை. இவ்வகையில்‌, உண்மையாகவே, மக்கள்‌  அனைவரும்‌--அவர்கள்‌ விரும்பினும்‌ விரும்பாவிடினும்‌-- தத்துவ அறிஞர்களாயிருக்கின்றனர்‌. அவர்களுள்‌ ஒருசிலர்‌ இவ்‌வாராய்ச்சிக்குத்‌ தங்கள்‌ வாழ்க்கையில்‌ முதலிடம்‌ தருகின்றனர்‌; தங்களுடைய சமூகம்‌, மரபுகள்‌ இவற்றின்‌ அடிப்படைத்‌ தத்துவஆராய்ச்சியின்‌ குவிமுனைகளாக இவர்கள்‌ விளங்குகின்‌றனர்‌.

மேனாட்டுகளில்‌ உள்ளது போல் உண்மையான தத்துவ ஆராய்ச்சி வேரெங்கும் இல்லை என்று மேனாட்டுத்‌ தத்துவ வரலாற்று ஆசிரியர்கள்‌ சிலர்‌ எழுதுவதும் நமது சிலர் எழுத்துகளும் வியப்பாயிருக்கிறது. இந்தத்‌ தவறான எண்ணம்‌ அவர்கள்‌ கீழ்‌ நாடுகளின்‌ தத்துவங்களைப்‌ பற்றி அறியாமையால்‌ எழுவதாகும்‌,

சமீபகாலம்‌ வரையில்‌ நம்முடைய தத்துவப்‌ பாடத்‌ திட்டங்கள்‌ அளவுக்கு மீறி மேனாட்டுத்‌ தத்துவத்திற்கு இடம்‌ தந்திருந்தன என்றும்‌ சொல்லலாம்‌. மேனாட்டினரும்‌ கீழ்நாட்டினரும்‌ சந்திக்கும்‌ தத்துவ மாநாடுகளில்‌ கீழ்நாட்டுத்‌ தோழர்கள்‌ மேனாட்டுத்‌ தத்துவங்‌களில்‌ எய்தியிருக்கும்‌ புலமையைக்‌ கண்டு மேனாட்டுத்‌ தத்துவஅறிஞர்கள்‌ வியப்படைகின்‌றனர்‌.

 இவையெல்லாம் விட நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதை பார்ப்போம்

உலகத்தை விளக்குவதற்கு மட்டுமல்லாமல்‌ அதை மாற்றி அமைப்பதற்கான கடமையை முதன்மைப்‌ படுத்தும்‌ ஒரு சமூக விஞ்ஞானம்‌ மார்க்சியம்‌. இது ஒரு சமூக விஞ்ஞானம்‌ என்பதனாலயே இதற்கு முன்னிருந்து வந்த கோட்பாடுகளைக்‌ கேள்வ்விக்குள்ளாக்கியது. இது ஒரு சமூக விஞ்ஞானம்‌ என்பதாலேயே இதன்‌ காலத்திலும்‌ இதற்குப்‌ பின்னரூம்‌ எழுந்த பலகேள்விகளுக்கும்‌ இது உள்ளாகியது. விஞ்ஞானம்‌ என்ற சிந்தனைப்‌ பிரிவின்‌ பண்பும்‌ பயனுமே அது தான்அதாவது கேள்வி கேட்பதும்‌ கேள்விக்குள்ளாவதும்தான்‌. இப்‌ பரிசோதனையில்‌ ஆதாரமற்ற கருதுகோள்‌ வாழ்வதற்‌கானதகுதியை இழக்கின்றன. உண்மையை அடிப்படையாகக்‌ கொண்ட கோட்பாடுகள்‌ வளர்ச்சி பெறுகின்‌றன.

மார்க்சியத்தை இவ்வாறு ஒரு சமூக விஞ்ஞானம்‌ என்றுகூறும்பொழுது மார்க்சியத்துக்கும்‌ நவீன வீஞ்ஞானத்துக்கும்‌ எத்தகையதொரு நேரிடையான உறவும்‌ அதன் வளர்ச்சியையும் புரிந்திருக்க வேண்டும்.இன்றைய விஞ்ஞானகள்‌ பலர்‌ கம்யூனிசத்தை ஏற்காதவர்ளாகவோ அல்லது எதிரானவர்களாகவோ இருக்கலாம்‌.ஆயினும்‌ கம்யூனிசத்துக்கும் விஞ்ஞானத்துக்கும்‌ நேரிடையான தொடர்பு இல்லை என்பது பிரச்சனையை மிகவும்‌ எளிமைப்படுத்தும்‌ வாதமாகும்‌. விஞ்ஞானத்தின்‌ மூலம்‌ மார்க்சியம்‌ பொய்யென நிரூபிக்க முயன்றவர்கள்‌ தோல்வியுற்றார்களே தவிர மார்க்சியம் தோற்றதில்லை. இது மார்க்சியம்‌ விஞ்ஞானத்துக்குப்‌ பகையானதல்ல என்ற உண்மையைத்தான்‌ நிரூபணம்‌ செய்கிறது.

இந்த வகையில்‌ மார்க்சியத்தை நோக்கித்‌ தொடுக்கப்பட்ட கேள்விகளுள்‌ முக்கியமானவை:

1. மார்க்சியம்‌ காலாவதியாகி விட்டதா?

2. மார்க்சியம்‌ வளர்ச்சியை மறுக்கும்‌ தத்துவமா?

இவ்விரண்டு கேள்விகளுக்கும்‌ ஆம்‌ என்பது விடையானால்‌ மார்க்சியத்தை எதிர்த்துப்‌. போரிடுவது ஒவ்வொரு மனிதாபிமானிக்கும்‌ உள்ள சமுதாக்‌ கடமையாகும்‌. ஏனெனில்‌ காலாவதியாகிவிட்ட ஒரு தத்துவம்‌ இன்னும்‌ நீடிப்பது மனித சமுதாயத்‌தின்‌ நலத்துக்கு உகந்ததல்ல. எவ்வளவு தான்‌ நெருங்கிய உறவினரின்‌ பிணம்‌ என்றாலும்‌ அதை நடுவீட்டில்‌ வைத்துப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பது சுகாதாரக்‌ கேடாகும்‌. வளர்ச்சியை மறுக்கும்‌ ஒரு தத்துவம்‌ கர்ப்பப்பையில்‌ புற்றுநோயை வளர்வது போல.அதைத்‌ தொடக்கத்திலேயே அறுத்தெறிவது தான்‌ உயிர்கள்‌ தோன்றுவதற்கும்‌ வளர்வதற்கும்‌ வழி வகுக்கும்‌.

மார்க்சியம்‌ குறித்த சிலரது முரண்‌பட்ட பார்வைகளையும்‌ தவறான அணுகுமுறைகளளயும்‌  மட்டுமே இங்குக்‌ கவனத்திற்‌ கொள்ள.  தனிமனிதரை விட மார்க்சிய எதிர்ப்பு முகாமிலிருந்து வரும்‌ சத்தங்களில்‌ கூடுதலானதாக சிலருடைய சத்தம்‌ இருப்பதால்‌ அவர்களை     கருத்தில் கொண்டு  எழுத்துகளைப்‌ பாரிசீலிக்கலாம்

வர்க்கத்திய தத்துவமா?

மார்க்சியம்‌, பாட்டாளி வர்க்கத்துக்கான தத்துவம்‌ அதாவது ஒருகுறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமாகும்‌. அப்படியாயின்‌ அதை எப்படி அனைத்துந்‌ தழுவிய அணுகுமுறை ஆக ஏற்றுக்‌ கொள்ள இயலும்‌எனவே மார்க்சியத்தை ஒரு பொதுவான அணுகுமுறையாக ஏற்றக்‌ கொள்ளல்‌ இயலாது. இப்படிச்‌ சிலர்‌ கருதுகின்‌ றனர்‌.

இதற்கான விவாதத்திற்குள்‌ நாம்‌ நுழையும்‌ முன்‌ தத்துவம்‌ என்றால்‌என்ன என்பது குறித்து இரண்டொரு வார்த்தைகள்‌ கூறியாகவேண்டும்‌. தத்துவம்‌ என்றால்‌ அதுயாருக்கும்‌ எளிதில்‌ விளங்காத,விளங்கக்கூடாத கருத்துக்களின்‌ சேர்க்கை என்பதே இன்றும்‌ பலரின்‌ கருத்தாக உள்ளது. அந்த அளவிற்குத்‌ தத்துவம்‌ குறித்து தவறான கருத்து நிலவுகிறது.

தத்துவம்‌ என்பது உலகக்‌ கண்ணோட்டமாகும்‌. அதாவது உலகத்‌தைப்பந்றி அறிந்து கொள்கின்ற முயற்சியாகும்‌ மனித சமூகத்தையும்‌ அதன்‌ பங்கையும்‌, இயற்கைக்கும்‌ மனிதனுக்கும்‌ உல்ள உறவையும்‌ பற்றி அறிந்து கொள்கின்ற முயற்சியாகும்‌. எல்லோரும்‌ ஏதோ ஒரு வழியில்‌ உலகத்தை விளங்கிக்‌ கொண்டு இருக்கின்‌ றனர்‌. எனவே ஒவ்வொருவரும்‌ ஏதோ ஒரு தத்துவத்தைக்‌ கொண்டி ருக்கிறோம்‌,தாம்‌ கொண்டுள்ள தத்துவம்‌ குறித்தே அறியாமலும்‌ அல்லது அதுகுறித்துப்‌ பிறருடன்‌ விவாதிக்காமலும்‌ இருக்கலாம்‌; அன்‌றி, தெரிந்து  கொண்டும்‌ பிறருடன்‌ விவாதித்தும்‌ இருக்கலாம்‌. எனவே அனைத்து மனிதர்களும்‌ ஏதாவது ஒரு தத்துவச்‌ செல்வாக்கில்‌. உள்ளனர்‌ என்பது வெளிப்படை .. அந்தத்‌ தத்துவமே அவர்கள்‌ இயல்பில்‌ ஊறிவிடுகிறது;ஒன்‌றிவிடுகிறது. அதாவது, அவர்கள்‌ வாழ்க்கையாகவே மாறுகிறது. எளிய கிராமப்புறமக்கள்‌, 'ஆட்டுக்குத்‌ தாடி ஆண்டவன்‌ அளந்து வச்சதுதான்‌” என்று கூறும்போது சமயவாதிகளின்‌ விதிக்கோட்‌பாட்டை அவர்கள்‌ ஜனரஞ்சகமாகக்‌ குறிப்பிட்டு விடுகின்றனர்‌. அக்‌கூற்று, ஒருதத்துவத்தின்‌ பிரதிபலிப்பு அல்லவா?

இத்தகைய தத்துவங்களும்‌ தனிப்பட்ட மனிதர்களின்‌ அல்லது தத்துவ இயலர்களின்‌ மூளைகளில்‌ மட்டும்‌ உதித்த தனித்த கருத்துக்களல்ல. பொதுவான அம்சத்தில்‌ பார்த்தால்‌, இத்தகைய கருத்துக்களுக்கு ஒரு சமூக அடித்தளத்தைக்‌ காண இயலும்‌. அது அக்காலத்தில்‌ ஒரு - குறிப்பிட்ட சமூகக்‌ குழுவின்‌ சமூக நடவடிக்கைகளையும்‌ சமூக உறவு களையும்‌ ஏதேனும்‌ ஒரு விதத்தில்‌ வெளிப்படுத்துவதாக இருப்பதைக்‌ காணலாம்‌. எனவே அவை, தத்துவ அறிஞர்களின்‌ மூளைகளிலிருந்து திடீரென உதித்து வந்து விடுவதல்ல, ஆயினும்‌ அத்தகைய கருத்துக்களை உருவாக்கல்‌, அவற்றைக்‌ குறிப்பிட்ட வடிவத்தில்‌ வெளியிடல்போன்றவை அந்தத்‌ தத்துவ அறிஞர்களின்‌ தனித்‌ தன்மையைப்‌ பொறுத்ததாகும்‌. எனவே எந்தத்‌ தத்துவமும்‌ ஒரு குறிப்பிட்ட வர்க்‌கத்தோடுதான்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டிருக்கும்‌.

இங்கே வர்க்கம்‌ எனும்‌ சொல்‌ குறித்து சில சொற்கள்‌ கூறவேண்டியுள்ளது. வர்க்கம்‌ என்பதை மார்க்சிய மூலச்‌ சொல்லாக்கம்‌ என்‌றெண்ணி கலை இலக்கியத்தில்‌ மார்க்சிய அணுகுமுறை எதிர்ப்பாளர்‌கள்‌ வர்க்கம்‌ என்பதையே மறுப்பார்கள்‌. முதலாளிய சமூகவியலர்கள்‌ வர்க்கங்களின்‌ இருத்தலைக்‌ கூறியுள்ளதை இதற்குமுன்‌ கண்டோம்‌. ஆயின்‌ மார்க்சிய அணுகுமுறை எதிர்ப்பாளர்கள்‌, வர்க்கம்‌ என்பதை மார்க்ஸ்‌ கண்‌ பிடித்ததாக எண்ணிக்‌ கொண்டு எதிர்ப்பர்‌, இது அவர்‌ களின்‌ சமூகவியல்‌ அறிவின்மையைக்‌ காட்டுகிறது. அதே நேரரத்தில்‌ மார்க்சிய இலக்கியமுகாம்களில்‌ : வர்க்கம்‌ என்ற சொல்‌, செழுமைபான அர்த்தத்திலிருந்து பிறழ்ந்து வறட்டுத்தனமாகவும்‌ பரந்தஅறிவியல்‌ விளக்கத்திலிருந்து மாறுபட்டு குறுகலான தாகவும்‌,மார்க்சிய மூல அறிவு எதுவுமின்றியும்‌ அதற்கான குறைந்த பட்சதேடல்‌ முயற்சி இன்றியும்‌ வெறும்‌ வாய்ப்பாட்டுச்‌ சூத்திரமாகவும்‌ பயன்படுத்திக்‌ கொண்டதும்‌--கொண்டுவருவதும்‌ , இத்தகைய அறிவியல்‌ ஆழமான சொல்லாட்சிக்குரி:ப பயன்பாட்டுத்‌ தன்மை மதிப்பிழந்து போனது காரணம்‌ எனலாம்‌. எனவே சமூகம்‌ வர்க்கங்களாகப்‌ பிரிந்துள்ள நேரத்தில்‌ சமூகத்தில்‌ உள்ள பல்வேறு தத்துவங்களும்‌ எல்லா நேரங்களிலும்‌ சமூகத்தின்‌பல்வேறு நோக்கங்களை வெளிப்படுத்துவனவாகவே இருக்கும்‌.

எனவே தத்துவம்‌ என்பது எப்போதும்‌ வர்க்கத்‌ தத்துவமாகவே இருக்‌கும்‌ எனலாம்‌. சில தத்துவ அறிஞர்கள்‌இதை மறுத்துரைக்கக்‌ கூடும்‌ தத்துவத்தை வர்க்கம்‌ கடந்த ஒன்றாக எண்ணக்கூடும்‌. ஆனால்‌ உண்மை அதுவல்ல. ஒவ்வொரு கருத்திற்குப்‌ பின்னால ஒருவர்க்கத்‌தின்‌ முத்திரை குத்தப்பட்டுள்ளது என்ற லெனினின்‌ கருத்தை இவ்‌விடத்தில்‌ நினைவு கூர்தல்‌ சரியாகவிருக்கும்‌. எனவே அனைத்துத்‌ தத்துவங்களைப்‌ போன்று, மார்க்சியமும்‌ ஒரு குறிப்பிட்டவர்க்கத்திய தத்துவமாகும்‌. ஆயின்‌ அதே நேரத்தில்‌ இது ஒடுக்கப்பட்ட மக்கள்‌ அனைவரின்‌ தத்துவமாகும்‌. அது எப்படிஇதற்கு மார்க்சியத்தின்‌ தேவையை நாம்‌ காணவேண்டும்‌. இது குறித்து லெனின்‌ பின்‌ வருமாறு கூறுகிறார்‌.

மார்க்ஸ்‌-ஏங்கெல்ஸ்‌ ஆகியோர்‌ தொழிலாளர்களுக்கு ஆற்றிய சேவையைப்‌ பின்வரும்‌ சொற்களில்‌ கூறலாம்‌. உழைக்கும்‌ "வர்க்கம்‌ தங்களை அறிந்து கொள்ளவும்‌ உணர்ந்து கொள்ளவும்‌ கற்றுக்‌ கொடுத்தனர்‌. மேலும்‌ அவர்கள்‌ கனவுகளுக்குப்‌ பதிலாக அறிவியலை வைத்தனர்‌” தொழிலாளர்‌ வர்க்கம்‌ தம்மை அறிந்து கொள்ளவும்‌ உணர்ந்து கொள்ளவும்‌ வேண்டிய அவசியம்‌ என்ன? கனவுகளுக்கு மாற்றாக அறிவியலை வைக்க வேண்டிய அவசியம்‌ மார்க்சிய மூலவர்களுக்கு ஏன்‌ நேரிட்டது? இவற்றைத்‌ தெரிந்து கொண்டால்தான்‌ ஒருகுறிப்‌ பிட்ட வர்க்கத்திய தத்துவமாக உள்ள மார்க்சியம்‌, ஒடுக்கப்பட்ட மக்களின்‌ தத்துவமாகப்‌ பரவும்‌தன்மையைக்காண இயலும்‌. அதாவது மார்க்சியத்தின்‌ தனித்தன்மையையும்‌ அனைத்தும்‌ தழுவிய தன்மையையும்‌ அறிய இயலும்‌. மேற்கு ஐரோப்பிய நாடுகளில்‌ உறுதியாக நிலைத்த முதலாளியம்‌,கோடிக்கணக்கான விவசாயிகளைத்‌ தொழிலாளர்களாக மாற்றியது. பொறுக்கவியலாத வறுமையையும்‌ உழைப்புச்‌ சுமையையும்‌ அவர்கள்‌ தோள்மேல்‌ சுமத்திற்று, இதன்‌ விளைவாகத்‌ தொழிலாளர்‌ கள்‌ சினமுற்றணர்‌. தம்‌இழிநிலைக்குப்‌ புதியஇயந்திரங்கள்‌ வருகையே காரணம்‌ என எண்ணி, இயந்திரங்களை உடைத்தெறியும்‌ போராட்டத்தில்‌ இறங்கினர்‌. இந்தப்‌ போராட்டங்கள்‌ தோல்வி அடைந்தன. தோல்வியே வெற்றிக்கு ஆசான்‌ எனும்‌ மொழிக்கு ஏற்ப இவை தொழிலாளர்க்குப்‌ பல படிப்பினைகள்‌ கொடுத்தன, இங்கிலாந்து தொழிலாளரின்‌ சார்டிய இயக்கம்‌,  பிரெஞ்சுத்‌ தொழிலாளர்‌ எழுச்சி, (1881-1884), ஜெர்மன்‌ தொழிலாளர்‌ எழுச்சி (1844) ஆகியவை போன்ற எழுச்சிகளும்‌ மாபெரும்‌ வேலை நிறுத்தங்களும்‌ சில நிலைமைகளை வெளிப்படுத்தின. ஒன்று,முதலாளியத்திற்கு எதீராகப்‌ பாட்டாளி வர்க்கம்‌ உலக அரங்கில்‌ தோன்றி வலுப்பெறுகிறது. இரண்டு, இந்த வர்க்கம்‌ முதலாளியச்‌ சுரண்டலை மட்டுமின்‌ றி சகலவிதமான சுரண்டல்களையும்‌ முற்றாக ஒழிக்கும்‌ பணியை மேற்கொள்ள வேண்டும்‌ என்பதாகும்‌. மூன்றுஇருக்கின்‌ற அரசு அமைப்பை முற்றிலும்‌ தகர்த்து விட்டுப்‌ புதிய அரசு அமைப்பை உருவாக்க வேண்டும்‌ என்பதாகும்‌,இவை போன்ற பதிய நிலமைகள்‌ தோற்றுவித்த அடிப்படையான மாற்றத்தைக்‌ கொண்டுவர வேண்டுமானால்‌, அதற்குரிய தத்துவம்‌ தேவைப்படுகிறது. புரட்கிகரமான தத்துவம்‌ இல்லையெனில்‌ புரட்சிகர நடைமுறை இல்லை என்பர்‌, ஆயினும்‌ அத்தகைய தத்துவம்‌ சமூக நடை முறையின்‌ தேவையிலவிருந்து எழுவது ஆகும்‌. எனவே அந்‌நேரத்தில்‌, அதற்கு முந்தைய கால தத்துவ அறிவு, இயற்கை அறிவீயல்‌, சமூக அறிவியல்‌ ஆகியவற்றின்‌ வளர்ச்சியையம்‌ முற்‌போக்கு அம்சங்களையும்‌ கிரகித்துக்‌ கொண்டு இயங்கியல்‌ பொருள்‌முதல்‌ வாதம்‌ எனும்‌ முரணற்ற அறிவியல்‌ தளத்தின்‌ மேலே, காரல்‌மாக்ஸ்‌ (1815-1889), பிரடெரிக்‌ ஏங்கெல்ஸ்‌ (1820-1895) ஆகியோர்‌ தம்‌ சிந்தனையை எழுப்பினர்‌. இதுவே மார்க்சியமாக விரிகிறது. பழமையினின்று எவற்றை உட்கிரகித்து இயங்கியல்‌ பொருள்‌ முதல்வாதத்தின்‌ அடிப்படையில்‌ மார்க்சியத்தை உ

னர்‌ என்பதைப்‌ பின்னால்‌ விரிவாகக்‌ காண்போம்‌.
இவ்வாறு தன்னெழுச்சிக்‌ காலத்திலிருந்து விலகி அமைப்புக்‌ காலமாக விரிவடைந்த தன்மையைப்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ அறிவு ஆழமடையும்‌ போக்கோடு தொடர்புபடுத்திப்‌ பின்‌ வருமாறு மாசேதுங்‌ குறிப்பிடுவார்‌. * பாட்டாளி வர்க்கம்‌ தன்‌ நடை முறையின்‌ முதல்‌ கட்டத்தில்‌ இயந்திரங்களை உடைப்பதும்‌ தானாகவே எழுந்து போராடுவதுமான காலகட்டத்தில்‌ இருந்தது. அப்போது முதலாளியச்‌ சமூகத்‌தைப்பஈற்ய அதன்‌ அறிவு, புலன்‌ அறிவாக இருந்தது. முதலாளியத்தின்‌ பல்வேறு நிகழ்ச்சிகளுடைய தனித்‌ தனி அம்சங்களையும்‌ புற உறவுகளையுமே அது அறிந்திருந்தது. அந்தச்‌ சமயத்தில்‌ பாட்டாளி வர்க்கம்‌ தன்னுள்‌ ஒரு வர்க்கமாக” இருந்தது ,உணர்வு பூர்வமான ஸ்தாபன அமைப்புடன்‌ பொருளாதாரப்‌ போராட்டமும்‌ அரசியல்‌ போராட்டமும்‌ நடத்தும்‌ கட்டத்தைத்‌ தன் நடைமுறை மூலமும்‌ மார்க்சும்‌ ஏங்கெல்கம்‌ அறிவியல்‌ அளவில்‌ தொகுத்து மார்க்சியமாக உருவாக்கிய நீண்டகாலப்‌ போராட்ட அனுபவம்‌ மூலமும்‌, பாட்டாளி வர்க்கம்‌ முதலாளித்‌துவச்‌ சமூகத்தின்‌ சாராம்சத்தையும்‌ சமூக வர்க்சங்களுக்கு இடையிலான சுரண்டல்‌ உறவுகளையும்‌ தன்‌ சரித்திர பூர்வமான பணியையும்‌ புரிந்து கொள்ள முடிந்தது.”எனவே மார்க்சியம்‌ ஒரு குறிப்பிட்டவர்க்கத்திய தத்துவமா என்றகேள்‌விக்கு ஆம்‌ என்றே பதில்‌ தரலாம்‌. அது பாட்டாளிவர்க்கத்‌ தத்துவமாகும்‌. ஆயின்‌ அது பாட்டாளி வர்க்க நலனுக்கான தத்துவம்‌ மட்டும்‌தானா என்று கேட்டால்‌ இல்லை என்றே பதில்‌ தரலாம்‌. ஏனெனில்‌ முதலாளியச்‌ சமூக முரண்பாடுகள்‌ முற்றி மோதல்‌ காலகட்டம்‌ உருவான பின்னால்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ நலனோடு சுரண்டப்படும்‌ வர்க்கங்கள்‌ அனைத்தின்‌ நலனும்‌ இணைந்துள்ளது. பாட்டாளி வர்க்‌கத்தின்‌ விடுதலையோடுதான்‌ அனைத்து வர்க்கங்களின்‌ விடுதலை கட்டுண்டுள்ளது இதை ஏங்கெல்ஸ்‌ தெளிவாகக்‌ குறிப்பிடுகின்றார்‌:* கரண்டப்பட்டும்‌ ஒடுக்கப்பட்டும்‌ வரும்‌ வர்க்கம்‌ (பாட்டாளிவர்க்கம்‌) சுரண்டியும்‌ ஒடுக்கியும்‌ வரும்‌ வர்க்கத்திடமிருந்து  (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக்‌கொள்ள வேண்டுமானால்‌ சமுதாயம்‌அனைத்தையும்‌ சுரண்டலில்‌ இருந்தும்‌ ஒடுக்குமுறையிலிருந்தும்‌ என்றென்றைக்குமாய்‌ விடுவித்தே ஆகவேண்டும்‌ என்கிற இந்த அடிப்படைக்‌ கருத்து......” மேலும்‌ இதற்கு முந்தைய வரலாற்று முற்போக்கு இயக்கங்களுக்கும்‌ பாட்டாளி வர்க்க இயக்கங்களுக்கும்‌ ஒரு பெருத்த வேறுபாடு உண்டு.முந்தைய வரலாற்று இயக்கங்கள்‌ எல்லாம்‌ சிறுபான்மையோரது நலனுக்கான சிறுபான்மையினரது இயக்கங்களே, ஆனால்‌ பாட்டாளிவர்க்க இயக்கம்‌ மிகப்‌ பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின்‌ நலனுக்காக பெரும்பான்மையோர்‌ 'தன்னுணர்வோடு நடத்தும்‌ சுயேச்சையான இயக்கமாகும்‌.
இத்தகைய வழிகளில்தாம்‌, பாட்டாளி வர்க்கத்தத்துவம்‌ ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கங்களின்‌ நலனுக்கான தத்துவமாக உருமாறிவிடு கிறது எனலாம்‌. ஆயின்‌ இங்கே நமக்கு ஒருவிளக்கம்‌ தேவைப்படுகிறது. தத்துவங்கள்‌ அனைத்தும்‌ வர்க்கச்‌ சார்பானவையே. ஒவ்‌வொரு வர்க்கத்தின்‌ சமூகப்பாத்திரமும்‌ சமூகவளர்ச்சியில்‌ அதன்‌ பங்கும்‌ பிற வர்க்கத்திடமிருந்து வேறுபட்டிருப்பதால்‌, உலகத்தையும்‌ சமூகத்தையும்‌ பற்றிய உண்மையை அறிவதில்‌ ஒருவர்க்கத்‌ தத்துவம்‌ இன்னொரு வர்க்கத்‌ தத்துவத்தைவிட வேறுபட்டே காணப்படும்‌. ஆயின்‌, உண்மை என்பது யதார்த்தமாக, எல்லாவர்க்கங்களின்‌ சிந்தனைகளுக்குப்‌ புறம்பாக, இயல்பாக இருக்கிறது. எந்த வர்க்கத்‌திய தத்துவம்‌ உண்மையைக்‌ கூறுகிறது? அல்லது. உண்மையை இருங்குகிறது? ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவம்‌ முழு உண்மையைக்‌ கூறுகிறது எனச்‌ சொல்லல்‌ இயலுமா? ஒடுக்கப்பட்ட மக்களின்‌தத்துவமான மார்க்சியமும்‌, அதன்‌ அணுகுமுறையும்‌ முழு உண்மையைச்‌ கூறுகிறதா? கூறஇயலுமாஎல்லா உண்மைகளையும்‌ கண்டுபிடித்தாகிவிட்டது; இனிகண்டுபிடிக்க எதுவுமே இல்லை” என்ற ஓய்வுவாதத்தை மார்க்சியம்‌ பரிந்துரைக்க வில்லை, பொருள்களின்‌ உண்மையைக்‌ காணவே! [இயலாது என்ற மாயரவாதத்தையும்‌ மார்க்சியம்‌ ஏற்கவில்லை. முழு உண்மையை நோக்கித்தான்‌ மனித சமூகம்‌ நடைபோடுகிறது என மார்க்சியம்‌ கூறுகிறது. முழு உண்மையைக்‌ கண்டுபிடித்தாகிவிட்டது எனக்கூறலில்லை, மேலும்‌ உண்மை என்பது புறநிலை யதார்த்தத்தைப்‌ பற்றிய நமது அறிவாகும்‌. நமது அறிவு வளர்ந்துகொண்டே. இருக்கிறது. எனவே ஒருபொருளைப்பற்றிய அறிவு- உண்மை ஒப்பீட்டளவிலானதே; ஆனால்‌ அதே நோத்தில அது முழுமையை நோக்கிச்‌ செல்வதாகும்‌, உண்மையின்‌ ஒப்பீட்டுத்‌ தன்மைக்கும்‌ முழுமைக்கும்‌ இடையிலான தொடர்புகுறித்து லெனின்‌ பின்வருவாறு கூறுகிறார்‌:* இயக்கவியல்‌ பொருள்‌ முதல்வாதத்தைப்‌ பொறுத்து ஒப்பீட்டு உண்மைக்கும்‌ முழுமை உண்மைக்கும்‌ இடையில்‌ கடத்தற்கரிய எல்லை என்பது இல்லை. மார்க்சின்‌ ஏங்கெல்சின்‌ இயங்கியல்‌ பொருள்‌ முதல்‌ வாதத்தில்‌ நிச்சயமாக சில ஒப்பீட்டுத்‌ தன்மை வாதங்கள்‌ உள்ளன. ஆனால்‌ அதை ஒப்பீட்டுத்‌ தன்மை வாதமாக மட்டுமே குறுக்கி விடக்கூடாது. அதாவது நமது அனைத்து அறிவின்‌ ஒப்பீட்டுத்‌ தன்மையை அது ஏற்கிறது; ஆனால்‌ புறநிலை உண்மையை மறுக்கும்‌ உணர்வில்‌ அதைஏற்கவில்லை...” *ஆயின்‌ ஒடுக்கப்பட்ட மக்களின்‌ தத்துவமான மார்க்சியத்தை ஏனைய தத்துவங்களை விட உண்மைக்கு நெருங்கக்‌ கூடிய தத்துவமாக ஏன்‌ கருத வேண்டும்‌? முரணற்ற இயங்கியல்‌ பொருள்முதல்வாதத்‌ தத்துவத்தை அது தனது அடித்தளமாகக்‌ கொண்டுள்ளதுஅரச்க்சிறாமானாது! அதரஙற்கு முந்திய தத்துவங்களை விமர்சனரீதியில்‌ முழுழுற்றாக மறுக்கிறது. ஆனால்‌ ஏங்கெல்ஸ்‌ கூறியது போல்‌ அது வெறும்‌ மறுப்பு  இல்லை. ஆது மனித வரலாற்றில்‌ பெறப்பட்ட முற்போக்குக்‌ கருத்துக்கள்‌ அனைத்தின்‌ தொடர்ச்சியும்‌ உயர்மட்ட ஒருங்கிணைவும்‌ ஆகும்‌. இது குறித்து லெனின்‌ பின்வருமாறு கூறுகிறார்‌:* மார்க்சியம்‌ முதலாளியச்‌ சமூகத்தில்‌ பெறப்பட்ட மதிப்பு மிக்க சாதனைகளைச்‌ சற்றும்‌ புறக்கணித்து ஒதுக்கவில்லை. மாறாகமனிதச்‌ சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின்‌ இரண்‌டாயிரம்‌ ஆண்டுகளுக்கு மேற்பட்டவளர்ச்சியில்‌ இருந்தவிலை மதிப்புள்ள அம்சங்களையெல்லாம்‌ அது ஏற்றுக்கொண்டது?” ஏனைய தத்துவங்கள்‌ இருக்கின்ற அமைப்பு மாறாமல்‌ இருக்கும்‌ படி பார்த்துக்‌ கொள்வதற்கான விஷயங்களைச்‌ சொல்கின்‌றன. ஆனால்‌ மார்க்சியம்‌, வரலாற்று விதிகளின்படி உலகை மாற்றியமைப்பதற்கான விஷயங்களைச்‌ சொல்கின்றது.அனைத்து வகைப்பட்ட சுரண்டல்களிலிருந்தும்‌ மக்களை விடு விக்கக்‌ கூடிய தன்மை பெற்ற வரலாற்றின்‌ புரட்சிகரப்பாத்திரம்‌ ஏற்கும்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ தத்துவமாக மார்க்சியம்‌உள்ளது.
 மார்க்சியம்‌, திறனாய்வுத்‌ தன்மை மிக்கதும்‌ புரட்சிகரத்தன்மை மிக்கதும்‌ ஆகும்‌. வறட்டு வாதத்தை எதிர்த்து அனைத்துக்‌ கருத்துக்களையும்‌ கொள்கைகளையும்‌ புரட்சிர நடைமுறை என்ற கொதி கலனுக்குள்‌கொட்டி. சோதனை-மறுசோதனை என்று தொடர்ந்து செல்‌கிறது. இன்றைய உண்மையானது சரிப்படுத்தப்பட்டு, புதியஉண்மையாக வளர்த்தெடுக்கப்படவில்லையானால்‌, நாளை இதுவே பொய்யாக மாறலாம்‌ என்பதையும்‌ திறனாய்வுக்‌ கண்‌ணோட்டத்தில்‌ ஒப்புக்கொள்கிறது. மார்க்சியம்‌ வெறும்‌ திறனாய்வுக்‌ கண்ணோட்டத்தில்‌ மட்டும்‌ விஷயங்களை அணுகவில்லை. அப்படியிருப்பின்‌ அது, எதிர்‌மறைக்‌ கோட்பாடாக உருமாறி, செயலிழந்த தன்மைக்கு இட்டுச்‌செல்லும்‌. அது விமர்சனம்‌ மட்டுமே செய்து கொண்டிராது, பழமையை அகற்றிப்‌ புதுமையை அங்கே அமரவைக்கிறது.அதாவது அது புரட்சிகரமானதாகும்‌. அது தன்‌ நிலைபாட்டில்‌ உறுதியாக நின்று, புரட்சிகரக்‌ கருத்துக்களைப்‌ புரட்சிசர நடைமுறையின்‌ மூலம்‌ சோதனை செய்து கொள்கிறது.இவை போன்ற பல தன்மைகளை மார்க்சியம்‌ பெற்றிருப்பதாலேஇன்றைய நிலையில்‌ ஏனைய தத்துவங்களைவிட முழு உண்மைக்கு நெருங்கிக்‌ கொண்டிருக்கும்‌ தத்துவமாக மார்க்சியம்‌ விளங்குகிறது எனலாம்‌. எனவே மார்க்சிய எதிர்ப்பாளர்கள்‌, மார்க்சிய அணுகுமுறை பாட்டாளி வர்க்கத்திற்கான மட்டும்‌ உரியது. என்று சொல்லி அதன்‌ அனைத்தும்‌ தழுவியத்தன்மையை மூடிமறைத்துவிட இயலாது.
மார்க்சியம்‌--ஒரு குறிப்பிட்ட நாட்டின்‌ முறை பாட்டாளி வர்க்கத்திற்கான மட்டும்‌ உரியது. என்று சொல்லி அதன்‌ அனைத்தும்‌ தழுவியத்தன்மையை மூடிமறைத்துவிட இயலாது.

மார்க்சியம்‌--ஒரு குறிப்பிட்ட நாட்டின்‌கால் கட்டத்திய தத்துவமா?
இன்னுமொரு விமர்சனம்‌ மார்க்சியத்தை தோக்கிக்‌ கூறப்படுகிறது. மார்க்ஸ்‌ ஒரு நாட்டில்‌, அதனுள்ளூம்‌ குறுகி ஒரு சமுதாயத்தில்‌அ.தனுள்ளும்‌ குறுகி ஒரு கால கட்ட நிகழ்வில்‌, அதனுள்ளும்‌ குறுகி அதன்‌ புற வாழ்வின்‌ ஒர்‌ அம்சத்தில்‌ மார்க்கியத்தைக்‌ கண்டுபிடித்ததாகச்‌ சொல்வர்‌. அதாவது இவர்கள்‌ கண்ணோட்டத்தின்படி, மார்கசியம்‌ ஒருகுறிப்பிட்ட நாட்டின்‌ ஒருகூறிப்பிட்ட கால கட்டத்திய தத்துவம்‌ மட்டுமே, அப்படியிருக்ச அது எப்படி உலகளாவிய தன்மை பெறஇயலும்‌? மார்க்சிய அணுகுமுறை, எப்படி உலகளாவிய முறையில்‌ மார்க்சியம்‌ என்பது அப்படியின்லை. மார்க்சிய அணுகுமுனற உலகளாவியது. மார்க்சியம்‌ உலகளாவிய தன்மையைப்‌ பெற்றதை ஏங்கெல்ஸ்‌ முதன்முதலில்‌ குறிம்பிடுகின்‌ றார்‌. பாயர்பேக்‌ பற்றிய மார்க்‌சின்‌ ஆய்வுரைகளைமதிப்பிடும்போது, “ஒரு புதிய உலகப்பார்வையின்‌ ஒளிமயமான கருவிதையைத்‌ தாங்கியிருகும்‌ மூதல்‌ஆவணம்‌” .. என்கிறார்‌
 இதன்‌ உலகளாவிய அணுகுமுறைத்‌ தன்மையைக்‌ காண்போம்‌ தொடரும்

Thursday 25 August 2016

CPI, CPM ன் நிலைபாடு என்ன? மக்கள் விடுதலைக்கு?



நான் என்னுடை பதிவு நாளை எழுதுவேன் குருசேவ் பாதையில் மார்க்சியத்தை திரித்தவர்கள் இன்று லெனின்யம் காலவதியாகிவிட்டது என்கின்றனர் அப்படியெனில் மார்க்சியமும் இல்லை லெனினியமும் இல்லை வெரும் வாய் சவடால் கட்சியாய், மக்கள் விரோதிகளாக முதலாளிகளின் பாதம்தாங்கிகளாக மாறியுள்ள இவர்களை என்னவென்று அழைப்பது அவர்களே கூறட்டும்.... நாளை CPI, CPM முகதிரையை கிழிக்க புதிய பகுதியுடன் தொடர்வேன்...சி.பி 

23/07/2016

CPI, CPM ன் நிலைபாடு என்ன? மக்கள் விடுதலைக்கு?
தோழர்களே நான் இன்று எழுதும் நிலையில் இல்லை ஏனெனில் என்னுடை போன் பழுதடைந்துவிட்டது ஆகையால் திங்கள்வரை எழுத முடியாது என்றிருந்தேன் ஆனால் என்னை எழுத வைத்த திரிப்புவாதிகளையையே சாரும்!!! நான் போலிகள் என்ற வார்த்தையை வேறுவாக மாற்றிவிட்டேன், மார்க்சியம் அறிந்த முதல் வார்த்தை சமத்துவம் சகோதரவதுவம், நாம் முதலாளிய பிற்போக்குவாதிகள் அல்ல!! தோழமை என்ற வார்த்தையின் மகத்துவம் அறிவார்களா அதையையும் முதாலாளிகலிடம் அடகு வைத்துவிட்டார்களா? தெரியவில்லை? நமது வாதம் கம்யூனிசம் வளர்த்தெடுக்க மார்க்சிய சிந்தனையை தேடும் அதே வேளையில் முன்னோடியான CPI, CPM ன் வரலாற்றை உற்று நோக்குதல் அவசியம் அன்றோ, ஆகையால் வரலாற்றில் CPI,CPM ன் போக்கில் முதலாளித்துவத்திற்க்கு பல்லாக்கு தூக்கி மக்களை திசையின்றி நட்டாற்றில் விட்டுள்ளதையும் அதே போல் முதலாளிகளின் வளர்ச்சிக்கு முன்னனியில் சேவை செய்யும் இவர்களின் போக்கையும் மார்க்சியத்தின் பரிணாம வளர்ச்சி என்று மெச்சுவதா? இவர்களை நாம் கேள்வி கேட்பதனால் விழிதெழுவார்களா? இதோ நம் தோழர் ஒருவரின் விமர்சனம் கீழே:- வினவின் பதிவு
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.