Thursday 25 August 2016

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை -cp



CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்

 மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை -cp

1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம்போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மா-லெ இயக்கங்களுக்குள்ளும்  பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மா-லெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மா-லெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான்.கிட்டதட்ட அய்ம்பதாம் ஆண்டை நெருங்கப் போகிற மா-லெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வள்ர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில், ரஸ்சிய புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திர்த்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடினார். அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு முறியடித்தார் என்பதை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யம் நமக்கு சுட்டிகாட்டுகிறது.

முதலாளித்துவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகின்றதென்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது, ஒட்டு மொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மா-லெ புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சினைக்கான போரட்டத்தில்கூட ஒன்றினைந்து செயல்பட முடியாமல் போனதற்க்கு காரணம் என்ன?

சமூக மாற்றம், புரட்சியும்,மார்க்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்தல்லவே, நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது.  நாடோ வலது அரசியலை நோக்கி திருப்பட்டுள்ளது அதனை ஒட்டி அனைத்து பிழைப்புவாத கட்சிகளும் ஒருங்கிணைந்துகொண்டுள்ளது.

மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை லெனின்யம் வரையறுத்துள்ளது. லெனின் அவர்கள் சொன்னது போல் சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான், அதைக் குணப்ப்டுத்திக் கொண்டிருக்க வேண்டுமாயின் புரட்சியாளர்கள் நீடித்த ஒற்றுமையும், அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அந்த நோய்க்கு மருந்தாகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்  26/07/2016

நான் தொடர்சியாக வரலாற்றை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன், நான் நேற்று கேட்டகபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த பதிவை எழுதி கொண்டுள்ளேன். CPI,CPM தோழர்கள் சிந்திக்க நான் கேள்விகளை அடுக்கி கொண்டும் வரலாற்று நிகழ்வுகளை துணை கொண்டும் விளக்கவே இப்படி கையாலும் நிலை. சில CPI,CPM தோழர்கள் மா-லெ அமைப்பே தகற்ந்துவிட்டது நீங்கள் எழுத என்னவுள்ளது என்றெழுதியுள்ளார். CPI லிருந்துதான் CPMம் CPMலிருந்துதான் CPI(ML)ம் உருவாகின இவை தத்துவார்த்த ரீதியாக வளர்ச்சி போக்கில். போலிகளிலிருந்து பலர் நாளை உண்மையான தத்துவார்த்ததை தூக்கிபிடித்து மார்க்சிய லெலின்ய மாசெதுங்க் பாதையில் கட்சியை வளர்த்தெடுக்கலாம் ஆகையால் வரலாற்றில் தவறுகளை விமர்சன பூர்வமாக அணுகி உண்மையான கம்யூனிஸ்டாக வாழ முயற்சிப்போம் ..சி.பி

எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் போலி கம்யூனிஸ்டுகள்நூல் இழையில்மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும். ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே “மண்ணுகேற்ற மார்க்ச்சியம்” என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை, நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிக சுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது போலிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?
அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் அதிகார புரோக்கர்களான  இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் .... காணச் சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM  எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்ச்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசு படை பலத்தால் கொன்றொழித்த கைவர்கள் இன்றும் மார்க்ச்சியத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கும் கம்யூனிச துரோகிகள். அசலை வெளிக் கொணர்ந்தால் நகல் நகைப்பிடமாகும்.
கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால், பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும், வெளியே கட்சி ஆபிசிலும் பணபட்டுவாட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் குட்டு உடைந்து விடும். 48, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.
ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது. இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் போலிக் கம்யூனிஸ்டுகள்.
டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரிபோர்க் கொடிதூக்கிய ஜோதிபாசு எங்கே?
 சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. நீலக்கொடி தராதது ஏன்?
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இதை வலது, இடது கம்யூனிஸ்டுகள் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவையோ முந்திய வரலாறு என்றால், இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு என்ன செய்து கொண்டுள்ளனர்?.
மே.வங்கத்தில் நடந்தது என்ன? சில நிகழ்வுகளை பார்ப்போம்; ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை.
புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான தேசியபத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.
வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!
அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி போராடியவர்களை அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடினர்.
இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால், இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள். இடதுசாரிஅரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏய்க்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ. 47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.
இது மட்டுமின்றி,  தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும், பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி, பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.
போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால், இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், 2008 ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.
இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சொந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது இடதுசாரிஅரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சொந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.-( நன்றி வினவு)
இப்படி சீரழிவு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் இவர்கள் மக்கள் விரோதிகளாக ஆட்சிக்காக எதையும் செய்யும் கீழ்தரமான நிலையில்.. மற்றவை நாளை தொடருவேன்.....
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்  27/07/2016

முதலில் சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். பின்னர் மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?
CPI,CPM தோழர்கள் சிந்திக்க, இந்த சம்பவங்களை கூறுவதன் நோக்கம் இந்த செயல்பாட்டிலிருந்து உண்மை நிலையை புரிந்து கொள்ளதான்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென், மே.வங்கத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார்.( 2008 ல்) அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும், இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.
 மக்கள் பிரச்சினையை கையில் எடுத்த இப்பயங்கரவாதத்தை மாவோயிஸ்ட்டுகள் செய்தனர், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் பயங்கரவாதத்தைஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.
lalgarh1836
Add caption
இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்; நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள், கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி, கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.
புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், ஏகாத்தியபத்திய சுரண்டலின் உச்சகட்ட சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க இடதுசாரிஅரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை விடுதலைசெய்து அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ இடதுசாரிஅரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.
புதிய ஜனநாயகம், ஜூலை-2009
போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டதுஎன்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். […]
தோழர்களே மற்றவை நாளை தொடருவேன்....சி.பி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டதுஎன்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். “இம்மாவட்டங்களில் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லைஎன்றுபீதியில் கூச்சலிட்டனர் அரசு அதிகாரிகளும், போலீசாரும்.
வில்அம்பு, கோடாரி, அரிவாள் முதலான மரபு வழி ஆயுதங்களுடன் பல்லாயிரக்கணக்கான சந்தால் பழங்குடியின மக்கள், இம்மாவட்டங்களிலுள்ள போலீசு நிலையங்களை முற்றுகையிட்டு, போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இம்மாவட்டங்களை இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் அகலமான குழிகளை வெட்டித் துண்டித்தனர். சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு தடையரண்களை உருவாக்கினர்.
கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி வதைத்துச் சிறையிடப்பட்டுள்ள அனைத்து அப்பாவி பழங்குடியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; கடந்த நவம்பர் முதல் வாரத்தில் லால்கார் பகுதியில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுப் பழங்குடியினரை மிருகத்தனமாக வதைத்த குற்றத்துக்காக, போலீசு உயரதிகாரி ராஜேஷ்சிங், சந்தால் பழங்குடியின மக்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டுப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்ட லால்கார் போலீசார் மக்கள் முன் மூக்கு தரையில்படும்படி கீழே படுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதோடு, புறக்கணிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
வறுமைவேலையின்மை, அரசின் புறக்கணிப்பு, போலீசின் அடக்குமுறை முதலானவற்றால் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த சந்தால் பழங்குடியின மக்களை, நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட போலீசு அடக்குமுறையானது பேரெழுச்சிக்குத் தள்ளியது. சந்தால் பழங்குடியின மக்கள் மீதான போலீசு வெறியாட்டத்துக்குக் காரணம் என்ன?
மே.வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள், காடுகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாகும். சந்தால் பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இம்மாவட்டங்களில் சமூக நலத்திட்டங்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, சந்தால் பழங்குடியின மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் இம்மகளை அமைப்பாக்கி, அரசியல்படுத்திப் போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தனர். நக்சல்பாரி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில், மே.வங்க போலீசு பயங்கரவாதிகள் இப்பகுதியில் அப்பாவி மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதும், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அப்பாவிகளைக் கைது செய்து வதைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது.
இச்சூழலில், உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்துவரும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், இப்பகுதியில் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவக் கிளம்பினார்கள். ஏற்கெனவே சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பொ.மண்டலத்தை நிறுவி, மக்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கி, நாடெங்கும் அம்பலப்பட்டுப் போன சி.பி.எம்.ஆட்சியாளர்கள். இம்முறை இத்திட்டம் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், சதிகார முறையில் நிறைவேற்றிடத் துடித்தனர்.
இருப்பினும், ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக சந்தால் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து 5,000 ஏக்கரில் சி.பொ.மண்டலம் நிறுவப்படவுள்ள உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகள் இச்சிறப்புபொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பழங்குடியின மக்களைப் போராட்டத்துக்கு அணிதிரட்டி வந்தனர். கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அவசர அவசரமாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அறிவிக்கப்பட்டு, மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மைய அரசின் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில், மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி எச்சரித்தனர். இத் தாக்குதலில் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பில்லை.
இருப்பினும், மறுநாளே மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் மீது மே.வங்க போலீசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளையும், சைக்கிள்பாத்திரங்கள் போன்றவற்றைக் கூட விட்டுவிடாமல் நாசமாக்கிய போலீசார், மூன்று பள்ளிக்கூட மாணவர்களை அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து வதைத்தனர். சீதாமணி முர்மூ என்ற பெண்ணை துப்பாக்கிக் கட்டையால் போலீசார் தாக்கியதில் அவரது கண்களில் இரத்தம் பீறிட்டு, இன்று அவர் பார்வையிழந்துள்ளார். பல கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பலருக்கு எலும்பு முறிந்து மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், வியாபாரி, கண்பார்வையற்ற முதியவர் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டுக் கொடூரமாக வதைக்கப்பட்டனர். உள்ளூர் போலீசும் ரிசர்வ் போலீசும் சேர்ந்துகொண்டு விடியவிடிய 3 நாட்களுக்கு நடத்திய இத்தாக்குதலால் மித்னாபூர் மாவட்டமே பீதியில் உறைந்து போனது.
போலீசு அடக்குமுறையால் துவண்டுபோன சந்தால் பழங்குடியின மக்களிடம் நம்பிக்கையூட்டி அணிதிரட்டிய மாவோயிஸ்டுகள், லால்கார்ஜார்கிராம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களைக் கூட்டி விவாதித்து, அதனடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்கள் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒருங்கிணைக்கும்போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டிநிறுவப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 6ஆம் தேதி இரவு 5,000 பேருக்கு மேலாக வில்அம்பு, கோடரி, அரிவாள்களுடன் அணிதிரண்ட பழங்குடியின மக்கள் லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுச் சூறையாடி, போலீசாரை நையப்புடைத்துக் கொட்டடியில் தள்ளிப் பூட்டினர். தொலைபேசிமின்சார இணைப்புகளைத் துண்டித்தனர்.
மறுநாள், நவம்பர்7; அந்நவம்பர் புரட்சி நாளில் மேற்கு மித்னாபூர் மாவட்டமெங்கும் ஆயுதமேந்திப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்திய பழங்குடியின மக்கள், அம்மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அகலமான குழிகள் வெட்டி முற்றாகத் துண்டித்தனர். சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டுத் தடையரண்களை ஏற்படுத்தினர். சமரசம் பேச வந்த கீழமை நீதிமன்ற துணை மாஜிஸ்திரேட் பழங்குடியின மக்களால்கெரோசெய்யப்பட்டதால், அவரும் போலீசாரும் வாகனங்களை விட்டுத் தப்பியோடினர்.
அடுத்த இரு நாட்களில் மித்னாபூர் மாவட்டம் மட்டுமின்றி சந்தால் பழங்குடியினர் நிறைந்த புருலியா, பங்குரா மாவட்டங்களிலும் வில்அம்பு, கோடாரி, அரிவாள், துடப்பக்கட்டையுடன் போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும், சி.பொ.மண்டலத்துக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமிகு பேரணிகள் தொடர்ந்தன. இம்மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, போலீசு நிலையங்களும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. போலீசாரும் அரசு உயர் அதிகளாரிகளும் இம்மாவட்டங்களை விட்டுத் தப்பியோடினர். நவம்பர் 10ஆம் தேதியன்று பல்வேறு பழங்குடியின அமைப்புகள் ஒன்றிணைந்து தாஹிஜுரி எனுமிடத்தில் சாலை மறியல் நடத்தியபோது, தடியடி நடத்திக் கலைக்க முயன்ற போலீசாரை 5000க்கும் மேல் திரண்ட பழங்குடியின மக்கள் ஏறத்தாழ 5 கி.மீ.தொலைவுக்குத் துரத்தி துரத்தி வந்து விரட்டியடித்தனர். இம்மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து, பழங்குடியின மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும்விடுதலைப் பிரதேசங்களாகக் காட்சியளித்தன.
அரண்டு போன போலிக் கம்யூனிச ஆட்சியாளர்கள் சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டி, பழங்குடியின மக்களிடம் சமரசம் பேச வருமாறு அழைத்தனர். ஆனால், எல்லா ஓட்டுக்கட்சிகளும் தங்களுக்குப் பழங்குடியின மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று கூறி மறுத்துவிட்டன. மித்னாபூர் மாவட்டம், பின்பூர் தொகுதியில் பழங்குடியின மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற ஜார்கந்து கட்சி (நரேன்பிரிவு) எம்.எல்..கூடச் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தூது செல்ல மறுத்துவிட்டார். இதற்கிடையே, போலீசு அடக்குமுறையைக் கண்டித்து, திரிணாமூல் காங்கிரசு கட்சியினர் மித்னாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய சோசலிஸ்ட் ஐக்கிய மையக் கட்சியினர் ஜார்கிராம் பகுதியில் கடையடைப்புப் போராட்டத்தையும், பேரணிமறியல் போராட்டங்களையும் நடத்தினர். ஜார்கந்த் திசாம் கட்சி மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது.
மே.வங்கஇடது சாரிகூட்டணியிலுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான நந்தகோபால் பட்டாச்சார்யா, “அரசு அடக்குமுறையின் எதிர்விளைவுதான் சந்தால் பழங்குடியனரின் எழுச்சிஎன்றுஇடதுசாரிஅரசைச் சாடியுள்ளார். கூட்டணியிலுள்ள பார்வர்டு பிளாக் கட்சியின் செயலரான அசோக் கோஷ்,”பழங்குடியின மக்களை நீண்டகாலமாகப் புறக்கணித்து ஒடுக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இக்கிளர்ச்சி. இதற்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடுவதில் பயனில்லைஎன்று சி.பி.எம். ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம், நந்திகிராம வழியில் மோட்டார் சைக்கிள் ரௌடிப் படைகளைக் கொண்டு தாக்க சி.பி.எம்.குண்டர்களை ஏற்பாடு செய்தனர். சி.பி.எம்.கட்சியின் அமைச்சர் சுஷந்தாகோஷ், மாவட்டச் செலாளர் தீபக் சர்க்கார் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டுகளுடன் குண்டர் படை கட்டியமைக்கப்பட்ட போதிலும், பழங்குடியின மக்களின் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சி, இத்தாக்குதல் திட்டத்தை சி.பி.எம்.கட்சி நிறுத்தி வைத்துவிட்டது.
வேறுவழியின்றி பழங்குடியின மக்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்களை கமிட்டியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விழைவதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். மக்கள் கமிட்டியினரோ, இப்பேச்சுவார்த்தை பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் முன் பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்; அதற்கு முன் போலீசு அதிகாரிகள் மக்களிடம் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதிகார வர்க்கமோ தங்களைகெரோசெய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி , இதற்கு உடன்பட மறுத்தது.
இந்த இழுபறியோடு போராட்டத்தை மேலும் நீட்டித்தால், கூலிஏழைகளான பழங்குடியினருக்கு மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் இடர்ப்பாடுகள் பெருகும் என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு, போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தைச் சமூகப் புறக்கணிப்பு செய்யுமாறு பழங்குடியினருக்கு மக்கள் கமிட்டி அறைகூவல் விடுத்துள்ளது. இதனால் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவோ, அதிகார வர்க்கபோலீசு ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டதாகவோ கருத முடியாது. மக்கள் கமிட்டியின் சமூகப் புறக்கணிப்பு அறிவிப்பினால், இனி தவித்த வாய்க்கு தண்ணீர் கூட பழங்குடியின மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று உள்ளூர அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது அதிகார வர்க்கமும் போலீசும். இதுவே பழங்குடியின மக்களின் பேரெழுச்சிக்குக் கிடைத்த வெற்றி.
நேற்று, சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். இன்று, மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2008.

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்  25/07/2016

நான் நேற்றைய பதிவில் தலைப்பு மாற்றியிருந்தேன் ஆனால் இவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்தான் என்பதனை பல நிக்ழ்வுகள் நிருபிக்கின்றன அதனால் இதே தலைப்பில் தொடரும் எண்ணத்தில் உள்ளேன் தோழர்களே கருத்துகளை தெரிவிக்கவேண்டும் அப்போதுதான் உண்மையான தேவையான இலச்சியத்தை அடைய முடியும் இனி இரு வேறு நிகழ்வுகள் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏன் என்பதனை அறுவிக்க கீழே:-
போலி கம்யூனிஸ்டு AITUC சங்கம் தொழிலாளர்களுக்காக போராடுவதைப்போல நடித்து, முதலாளிகளுக்கு சேவை செய்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைப்பதை பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு அதையும் தாண்டிஎகிறிக்குதித்துமுன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளிஎன்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.- வினவு, August 26, 2014
சும்மாவா! ராம்கோ முதலாளி கட்சியின் முக்கியப் புரவலராயிற்றே! கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுக்கட்டாக பணமும் கொடுத்தவரல்லவா முதலாளி! அவ்வளவு ஏன்? கட்சியின் மாநிலக்குழு கூட்டமே ராம்கோ முதலாளி நடத்தும் பள்ளியில் தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவ்வளவு நெருக்கம்! தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணத்தில் முதலாளியிடம் விருந்து சாப்பிடுகிறார்கள். சி.பி. யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.
பி.எம்.ராமசாமி
இந்த எடுபிடிகள் பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் என்ன கூறியுள்ளனர்?
எவ்வித சட்ட உரிமையும், பாதுகாப்பும் இல்லாத தொழிற்சாலைகளிலெல்லாம் இவர்களது தொழிற்சங்கம் போராடி வருகிறதாம்! ஆனால், ராம்கோவில் அப்படி இல்லையாம்!
உண்மையில் இந்த எடுபிடிகளை தொழிலாளர்கள் குப்பையாக ஒதுக்கித் தள்ளி விட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதால் குமுறிக் கொண்டிருந்த இராஜபாளையம் மில்ஸ் சி யூனிட் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் செய்து சம்பள உயர்வைப் பெற்றனர். சி யூனிட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தின் வீரியத்தை மட்டுப்படுத்த வந்த எடுபிடி சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணித்து விரட்டியதை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த லட்சணத்தில் சட்டத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ராம்கோ முதலாளி என்கிறார்கள் இந்த எடுபிடிகள். (நன்றி வினவு, August 26, 2014)
தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொந்த பணத்தில் நிலம் வாங்கி அதனை குறைந்த விலையில் தொழிலாளிகளுக்கு கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது, பள்ளி, கல்லூரிகளை உருவாக்கியது என்று கோயபல்சுகளே வெட்கப்படும் அளவுக்கு இந்த போலி கம்யூனிச எடுபிடி தொழிற்சங்கங்கள் முதலாளிக்கு கூஜா தூக்கியிருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?
ராம்கோ பிரசுரம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராம்கோ முதலாளி பிறந்தநாள் கொண்டாங்களை எதிர்த்து தன்னிச்சையாக தொழிலாளர்கள் ஒட்டிய சுவரொட்டி
முதலாளி பி..சி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்த ஆலை நிர்வாகமா தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளும், தொழிலாளர்களுக்காக வீடும் கொடுக்கப்போகிறது? கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களும், குளங்களும் ராம்கோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், இதற்காக யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும் அவர்களுக்கு கார் பரிசளிப்பதும் வாடிக்கை என்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, இராஜபாளையம் மக்களே பேசுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட நிலங்களைத்தான் செண்டுக்கு ரூ 4,000 எனும் விலையில் தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்தது ஆலை நிர்வாகம்.
போலி கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க அழைத்து விட்டு அதை மனித முகம் கொண்ட முன்னேற்றம் என்கிறார்கள். இவர்களோ ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரனை வள்ளல் என்கிறார்கள். வேண்டுமானால் இந்த எடுபிடிகள் இன்னொரு நோட்டீஸ் போட்டு அதில் என்ன செலவில் எவ்வளவு நிலம் பெறப்பட்டது? எத்தனை தொழிலாளிக்கு நிலம் கொடுத்தார்கள்? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடட்டும்.
தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராம்கோ முதலாளி. இந்த மண்டபத்தில் எந்த தொழிலாளியின் சுபநிகழ்ச்சிக்காவது இலவசமாகக் கூட வேண்டாம் குறைந்த வாடகையிலாவது கொடுத்ததிருக்கிறார்களா? ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தொழிலாளியின் வீட்டு வைபவம் என்றால் முன்னுரிமை கொடுப்பார்களாம். என்ன பித்தலாட்டம் இது! ஆனால் தற்சமயம் முன்னுரிமை கூட கொடுப்பதில்லை என்பது தான் உண்மை. ===========நன்றி வினவு, August 26, 2014++++++++++++++++++++ கீழே மற்றொரு நிகழ்வு+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? - சி.பி.எம். இன் நில அபகரிப்பு
மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும்  தற்கொலை  என்றுதான் கூறியது.
இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.
குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள்  அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட்(2008) மாத இறுதியில் நடந்தன.
மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல்ராஜர்காட் பகுதியில்அமைதியான முறையில்நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான்  மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!
இந்தப் பகுதியில்ராஜர்காட் புது நகரம்என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான்வேதிக் வில்லேஜ்’’.
கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.
வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளைப் பெரும்பான்மையாக கொண்ட ராஜர்காட் பகுதி, மேற்கு வங்கத்திலேயே மண்வளமிக்க பகுதிகளில் ஒன்று. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு போகம் வரை விளையக்கூடிய  அளவுக்கு மண்வளமும், நீர்வளமும் அபரிமிதமாக உள்ளதுஅனைத்து பயிர் வகைகளும், தானியங்களும், காகனிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையில் 20 முதல் 25% இந்தப் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் நீர்பாசனத்திற்கு மட்டும் ஐந்து கால்வாகள்  உள்ளன. இந்த கால்வாகளையும், பிற செயற்கை மீன்பிடிக் குட்டைகளையும் நம்பி மீன்பிடித் தொழிலும் வளமாக உள்ளதுபால் உற்பத்தியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் வளமிக்க அந்த மண்ணை நம்பித்தான் உள்ளன.
இந்தப் பகுதியில்  புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகளும் அது சார்ந்த பிற உள்கட்டுமானங்கள், கேளிக்கை விடுதிகள், வீட்டுவசதிகள் போன்றவற்றை நிர்மாணிப்பது என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும்ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்புஎன்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட  உள்ளதாக அரச அறிவித்தது.   இதையொட்டி சுமார் 7000 ஹெக்டேர் அளவிலான நிலமும், நீர்நிலைகளும் கையகப்படுத்தப்படுவது 1999-லிருந்து தொடங்கியது. இத்திட்டம் வரும் முன்னரே, காங்கிரசு கட்சியால் பாதுகாக்கப்பட்ட ரவுடியான ருதஸ் மண்டலை சுவீகரித்துக் கொண்ட சி.பி.எம். கட்சி, 1993-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அவனைக் களமிறக்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் செய்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவனை வெற்றியடையச் செய்தது சி.பி.எம். இவனைப் போன்ற ஒரு ரவுடியை அதிகாரத்தில் வைப்பதன் மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்க முடியும் என்ற திட்டத்துடன்தான் சி.பி.எம். அரசு இதனைச் செய்தது.
ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னரே மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய நில விற்பனைத் தரகு மாபியாவும், சி.பி.எம். கட்சியின் நெருங்கிய நண்பனுமான, கமல் காந்தியும் அவனது மார்வாரி நண்பர்களும் இந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போடத் தொடங்கினர். சி.பி.எம். கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ராஜர்காட் பகுதியில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தான், கமல் காந்தி. நிலங்களைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் இவனால் கடுமையாக மிரட்டப்பட்டனர்சில கொலைகளும் விழுந்தன. நிலங்களை கைமாற்றியதில் சி.பி.எம். பிரமுகர்கள் பலரும் நேரடியாக லாபம் அடைந்தனர்போலீசு-சி.பி.எம்.கட்சி-ரவுடிகள் கூட்டணியுடன் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான் கமல் காந்தி. வாங்கிய நிலங்களில் ஒரு பெரும் பகுதி சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், கமல் காந்தியின் உறவினருமான சரளா மகேஸ்வரிக்குச் சொந்தமாக்கப்பட்டது. இதன் காரணமாக சி.பி.. (மார்வாரி) கட்சி என்ற பெயரும் சி.பி.எம்.-முக்குக் கிடைத்தது.
1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டனஇவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.
சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே  அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்..வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும்  போலீசு குண்டர் படையினராலும்  மிரட்டப்பட்டனர். குனிஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள்  சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
இன்னொரு பக்கம், மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் வலுத்து வந்த நிலையில், ராஜர்காட்டில் சி.பி.எம்.மிலிருந்து வெளியேறிய கமல் பத்ரா என்பவர் தலைமையில் ஒரு இயக்கம் உருவானது. சி.பி.எம். குண்டர் படை இவரைக் கடத்திச் சென்று கொன்று பிணத்தை மரத்திலே தொங்கவிட்டது. இவரது படுகொலை, ராஜர்காட் பகுதியின் எதிர்ப்பியக்கங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எதிர்ப்பியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தன.
ராஜர்காட்டில் நடந்த இந்த நிலப்பறிப்பு மோசடிகள் அனைத்திலும் அனைத்துக்  கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும் நேரடியாக லாபம் அடைந்தனர். எனவேதான், நந்திகிராமிலும் சிங்கூரிலும் விவசாயிகளுக்காகப் போராடுவதாக நாடகமாடிய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு, ராஜர்காட் மோசடிக்கெதிராக ஒப்புக்குக் கூட பேசவில்லை. ஒருபடி மேலே சென்று, விவசாயிகளை நம்ப வைத்து அக்கட்சி கழுத்தறுத்ததுகொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பை எதிர்த்து விவசாயிகளின் இயக்கம் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. திரிணாமுல் காங்கிரசும் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்நிலையில், “நாங்களே வழக்கு நடத்துகிறோம், எங்களால்தான் வழக்குக்கான பொருளாதாரச் சுமைகளை சமாளிக்க இயலும்என்று கூறி விவசாயிகளின் வழக்கை அக்கட்சி வாபஸ் பெற வைத்ததுஅதைத்தொடர்ந்து, உடனே திரிணாமுல் காங்கிரசும் வழக்கைத் திரும்பப் பெற்று கழுத்தறுத்தது.
அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான்மே மண்டல், ராஜர்காட்டில் எஞ்சியுள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அபகரித்து, அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளான். எஞ்சியுள்ள நிலம் குறித்த விவரங்களை சி.பி.எம். கட்சிக்காரர்களின் உதவியுடன் ஹிட்கோ (HIDCO) அரசு அலுவலகத்தில்  இருந்து இவன் பெற்றுள்ளான். இந்த சி.பி.எம்.  திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம்  வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.
எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்ட நிலையில், ராஜர்காட்டின் வளமிக்க குளம், குட்டைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் நிரவப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சி.பி.எம்., காங்கிரசு, திரிணாமுல் கட்சியினர் இவற்றில் முதலீடு செய்து கொழுத்த லாபமடைந்தனர்மாநகராட்சி விதிமுறைகளில் தில்லுமுல்லுகள் செய்து பல கோடிகள் சுருட்டப்பட்டன. புற்றீசல் போல கேளிக்கை பூங்காக்கள் பெருகின. விபச்சாரமும், குடியும் கூத்தும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட கேளிக்கை விடுதிகளில் ஒன்று, சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு வீராங்கனையுமான  ஜோயிதிர்மயி சிக்தரின் கணவருக்குச் சொந்தமானதாகும். வேதிக் வில்லேஜ் கேளிக்கை விடுதியே சி.பி.எம்.மின் கூட்டாளியான மார்வாரி கமல் காந்தியின் நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜர்காட்டில் இப்பொழுது மீதமிருக்கும் விவசாய நிலங்களையும் அபகரிப்பதற்காக இன்னொரு திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. பாங்கோட் ராஜர்காட் பகுதி மேம்பாட்டு நிறுவனம் (BRADA-Bhangot Rajargat Area Development Authority) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் செயலாளராக இருப்பவர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரான ராபின் மண்டல். இந்தத் திட்டத்திற்காக ஒரு காதாவிற்கு ரூபா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுத்து வாங்கியுள்ள ராபின் மண்டல் கும்பல், அதனை ரூபா 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளது.
சி.பி.எம்.-மின் நில மோசடி சந்தி சிரிக்கத் தொடங்கியவுடன், அந்தக் கட்சியின் மாநிலக் குழு தலையிட்டு ராஜர்காட் திட்டத்தைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறியுள்ளது. சி.பி.எம். அரசோ தேனெடுத்த கையால் புறங்கையை நக்கிப் பழகிவிட்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயங்கியது. சி.பி.எம். கட்சியின்  நிலம் மற்றும் நிலச் சீரமைப்புத் துறை அமைச்சரான அப்துர் ரெசாக் மொல்லா பின்வருமாறு திமிராக கூறினார்: “பொழுதுபோக்கு மையத்திற்கும், கேளிக்கை விடுதிக்கும் நிலம் கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்றுஅக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் உள்ள சீத்தாரம் யெச்சூரியோவிப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ராஜர்காட்டில் நிலம் ஒதுக்குவதை நிறுத்தக் கூடாதுஎன்கிறார்.
மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சினையில் ஆழ்ந்த மௌனம் சாதித்தார். பின்னர் விவசாயிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்தார். இப்பொழுது சி.பி.எம். அரசே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கும் நிலையில், நிலங்களை மீண்டும் கைப்பற்றி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகளிடம் சவடால் அடிக்கிறார். ஆனால், விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்ய இயலாது. ஒருவனைக் குடிபோதையில் தள்ளிவிட்டு மீண்டும் குடிக்காதே என்று சொல்லுவது போல, நவீன நகரத்தை உருவாக்கி விவசாயிகளை உதிரிப் பாட்டாளிகளாக மாற்றிவிட்டு, அத்தகைய கலாச்சாரத்தில் தள்ளிவிட்டு, இப்பொழுது மீண்டும் விவசாயம் செய்யச் சொன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதுபழைய வாழ்க்கைக்கும், புதிய வாழ்க்கைக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.
சி.பி.எம். தலைவர்கள் நேரடியாகவே ராஜர்காட் நில மோசடியில் ஈடுபட்டு அம்பலமாகியுள்ளனர். கட்சியோ இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்குத் தயாராக இல்லை. ஊழல் பெருச்சாளிகளான உள்ளூர் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மே.வங்கத்தில் சி.பி.எம். கட்சியே காணாமல் போய்விடும். எனவேதான், விசாரணை ஏதுமின்றி திட்டத்தைக் கைவிடச் சொல்லி சாமர்த்தியமாக களவாணித்தனத்தை மறைப்பதற்குக் கற்றுத் தருகிறது. இந்த ஞானோதயம் கூட சி.பி.எம். கட்சிக்கு நேர்மையின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தோன்றவில்லை. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், தொழிலாளி வர்க்கம் போன்றவை, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் கைகழுவி விட்டன. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயி வர்க்கமும் கைகழுவி விட்டதென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் எனும் அச்சத்தின் காரணமாகவே இந்த ஞானோதயமும் வந்துள்ளது.
சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக  மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும்  ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்ததுஉள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.
-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதுஎன்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப்பயங்கரவாதிகள்என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது. மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்கஇடதுசாரிஅரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. […]    நன்றி வினவு

நான் என்னுடை பதிவு நாளை எழுதுவேன் குருசேவ் பாதையில் மார்க்சியத்தை திரித்தவர்கள் இன்று லெனின்யம் காலவதியாகிவிட்டது என்கின்றனர் அப்படியெனில் மார்க்சியமும் இல்லை லெனினியமும் இல்லை வெரும் வாய் சவடால் கட்சியாய், மக்கள் விரோதிகளாக முதலாளிகளின் பாதம்தாங்கிகளாக மாறியுள்ள இவர்களை என்னவென்று அழைப்பது அவர்களே கூறட்டும்.... நாளை CPI, CPM முகதிரையை கிழிக்க புதிய பகுதியுடன் தொடர்வேன்...சி.பி ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ to be contd...............

23/07/2016

CPI, CPM ன் நிலைபாடு என்ன? மக்கள் விடுதலைக்கு?
தோழர்களே நான் இன்று எழுதும் நிலையில் இல்லை ஏனெனில் என்னுடை போன் பழுதடைந்துவிட்டது ஆகையால் திங்கள்வரை எழுத முடியாது என்றிருந்தேன் ஆனால் என்னை எழுத வைத்த திரிப்புவாதிகளையையே சாரும்!!! நான் போலிகள் என்ற வார்த்தையை வேறுவாக மாற்றிவிட்டேன், மார்க்சியம் அறிந்த முதல் வார்த்தை சமத்துவம் சகோதரவதுவம், நாம் முதலாளிய பிற்போக்குவாதிகள் அல்ல!! தோழமை என்ற வார்த்தையின் மகத்துவம் அறிவார்களா அதையையும் முதாலாளிகலிடம் அடகு வைத்துவிட்டார்களா? தெரியவில்லை? நமது வாதம் கம்யூனிசம் வளர்த்தெடுக்க மார்க்சிய சிந்தனையை தேடும் அதே வேளையில் முன்னோடியான CPI, CPM ன் வரலாற்றை உற்று நோக்குதல் அவசியம் அன்றோ, ஆகையால் வரலாற்றில் CPI,CPM ன் போக்கில் முதலாளித்துவத்திற்க்கு பல்லாக்கு தூக்கி மக்களை திசையின்றி நட்டாற்றில் விட்டுள்ளதையும் அதே போல் முதலாளிகளின் வளர்ச்சிக்கு முன்னனியில் சேவை செய்யும் இவர்களின் போக்கையும் மார்க்சியத்தின் பரிணாம வளர்ச்சி என்று மெச்சுவதா? இவர்களை நாம் கேள்வி கேட்பதனால் விழிதெழுவார்களா? இதோ நம் தோழர் ஒருவரின் விமர்சனம் கீழே:- வினவின் பதிவு
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.
போலி-கம்யூனிஸ்டுகள்

நாங்கசேகுவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.
முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !
தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் !
அது வரைக்கும் ?
போயசு தோட்டம்தான் !
கேட்டவர் அதிர்ச்சியடைய
டோட்டலாய்விளக்கினார் தோழர் :
யாருடைய காலில் விழுந்தாலும்சி.பி.எம்.
தன் கொள்கையை மட்டும் இழக்காது.
மக்கள் விரோதிகள் எவரும் இனி
மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !
அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும்
அம்மாசபதம் முடிக்காமல்பொலிட்பீரோஅடங்காது.
அப்புறம் எப்போது புரட்சி?
அது இருக்கட்டும் தோழரே,
சி.பி.எம். வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:
அன்று நேருவை அடையாளம் கண்டோம்
அவரிடம் சோசலிச வாடையை வளர்த்தோம்.
காங்கிரசுக்கு உள்ளே இருந்தே
முற்போக்கு சக்திகளை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.
அப்புறமாகேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்னு
ஆட்சியைப் பிடிச்சோம்.
அடுத்தது புரட்சி ?
பின்னே ஆயுதம், வன்முறை இல்லாமல்
அனைவருமே சமமாகி சோசலிசம் படைக்க
நம்ம நம்பூதிரிபாடு ஆட்சியிலதான்
நாட்டிலேயே முதன்முதலா
லாட்டரி சீட்டு அடிச்சோம் !
அல்லாவை வென்றெடுத்து
மத நல்லிணக்கம் நிலைநாட்ட
முசுலீம் லீக் கூட்டணி முடிச்சோம்
இந்துக்களிடமும் வர்க்கத்தீயை மூட்டிவிட
சபரிமலையில் மகரஜோதி பிடிச்சோம் !
காசு சேர்த்து நிலத்தை வாங்கி
பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிச்சோம்
போர்க்குணத்துடன் போலீசை பயிற்றுவித்து
போய்…. நக்சல்பாரிகளைக் கடிச்சோம்
இப்படி …. கச்சிதமா கம்யூனிசத்தை முடிச்சோம் !
சரி புரட்சி எப்போது ?
அட ! டாடாவையே வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !
பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
விவசாயிகள் மண்டையை உடைச்சோம்.
பெண்களென்னும் பேதம் பார்க்காமல்
புடவையை பிடித்து கிழிச்சோம்.
வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி, தொழிலாளி வர்க்கத்தையே ஒழிச்சோம் !
இதுவா புரட்சி !
இது மட்டுமா ! சாதி ஆதிக்கத்தை ஒழிக்க
உத்தபுரம் சுவரை நாங்கதான் இடிச்சோம்.
சிறுதாவூர் தலித் நில பிரச்சனைக்கும்
நாங்கதான் கொடி பிடிச்சோம்
இப்ப, செயல்தந்திர அரசியல்படி
அம்மா தோட்டத்திலேயே அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.
போர் என்றால் நாலுபேர்
சாகத்தான் செய்வார்கள் என்று
இழவெடுத்த புரட்சித்தலைவிஇப்போது
போர்நிறுத்தம் வேண்டுமென்று
உண்ணாவிரதம் இருந்தது கண்டு
உண்டியலுக்கு வெளியே காணிக்கையாய் கிடந்தோம் !
ஊரை அடித்து உலையில் போட்ட பானையோ ! – இன்னும்
யாரை மிதிக்கக் காத்திருக்கும் யானையோஎன்று
அம்பிகையைப் பார்த்தவுடன் அந்தக்கால நினைவு வந்தபோதும்,
பாதம் பணிந்த . பன்னீரும், பஜனை குழுவோரும்
பசியெடுத்த அம்மாவின் பக்கத்தில் நில்லாமல்
ஒரு காதம் விலகி வேண்டி நின்ற போதும்.
ஈழத்தமிழருக்காய் ஈரம் கசிந்து
ஓதம் காத்த அந்தச் சுவரோரம்
அஞ்சாமல் ஒதுங்கிய எங்கள் போர்த்தந்திரம் சும்மாவா ?
இதிலென்ன புரட்சி ?
சமரச சுத்த சன்மார்க்க சபை கலைந்துஎங்கள்
சமரச சித்தாந்த சன்னதியின் தீக்கதிரில் நாக்குழறி
எச்சு ஊறி எங்கள் எச்சூரி பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !
சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை
ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு ! கடைசியில் என்னாச்சு ?
நம்ம துணையில்லாமல்
அவனால் நாடாள முடிந்ததா ?
நள்ளிரவில் எழுப்பி விட்டு
நம் அரசு ஊழியர் வர்க்கத்தை
சிறையில் தள்ளினாளே ஜெயலலிதா
இப்போது என்ன ஆச்சு ?
வலது, இடதாக தா. பாண்டியனையும், வரதராசனையும்
ஜெயலலிதா வளைத்துப் பிடிப்பதைப் பார்த்து
தோட்டத்து சசிகலாவே வாட்டத்தில் பொருமுகிறாள்.
நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?
போதும்எப்போதுதான் புரட்சி ?
வந்தது கோபம் தோழருக்கு :
அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி, புரட்சின்னா…. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?
துரை. சண்முகம்
தோழர்களே நான் எழுத நிறையவே உள்ளது ஆனால் நமது தோழர்கள் எழுதவிட்டால்தானே!!!
புரட்சி.... தொடரும்.....சி.பி

Ravindran 1-முதல் உலகப்போர் காலத்தில் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினது மதிப்பீட்டின் அடிப்படையில் ஏகாதிபத்தியவாதிகள் உலகை மறுபங்கீடு செய்வதற்காக போர் நடத்திட ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களது தீய நோக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி போரை தடுத்திடவேண்டும். அவ்வாறு தடுக்க இயலாதபோது, போர் துவங்கிவிட்டால், போரில் ஈடுபட்டிருக்கும் சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தி பாட்டாளி வர்க்கமானது ஆளும் வர்க்க ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சியை நிறுவிடவேண்டும் என்று லெனின் சொன்னார். அவர் சொன்னதை பல நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் அகிலத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டவர்களும் ஏற்றுக்கொண்டாலும் போர் துவங்கியவுடன் அகிலத்தின் முடிவிற்கு மாறாக சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுடன் கூட்டுசேர்ந்து உள்நாட்டு போரை நடத்த தவறியவர்கள் சோசலிச லட்சியத்தை அடையமுடியாமல் தோழ்விகண்டனர். ஆனால் இந்த நிலைபாட்டில் உறுதியாக நின்று உள்நாட்டுப்போர் என்ற வழியில் போராடி சோசலிச லட்சியத்தில் ரஷ்ய பாட்டாளிவர்க்கம் வெற்றிகண்டது. அதற்குப் பின்பு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மீதும், கம்யூனிச கொள்கையின் மீதும் நம்பிக்கைகொண்டு உலகில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உருவாக்கப்பட்டு மூன்றாம் அகிலத்தின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி கம்யூனிஸ்ட்டுகள் ஒரே அமைப்பாகவே உலகம் முழுவதிலும் செயல்பட்டனர். முதல் உலகப்போரின்போது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சிக்கான சாதகமான சூழல் நிலவியபோதும் அதனை சரியாக பயன்படுத்த தவறியது அந்த நாடுகளிலிருந்த கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் தலைமை. அதனால் மோசமான தோழ்வியை சந்தித்தனர்.
தோழர் அ.க. ஈஸ்வரனின் வலை பூவிலிருந்து                “தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் ஒளிவுமறைவில்லாத வகையில் வெளிப்படுத்தப்படுகிறது. சுரண்டல் முறைக்கு தமது எதிர்ப்பை, நேரடியாக தெரிவிக்கிறது, சுரண்டலை போக்குவதற்கான வழிமுறைகளைக் கையாள்கிறது. தமது சித்தாந்தத்தை பாட்டாளி வாக்கம் சமூகத்தின் செயல்பாடுகளையும், வளர்ச்சி விதிகளையும், வரலாற்றில் அதன் புறநிலைப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறது, அதனால் இந்த சித்தாந்தம் விஞ்ஞான வகைப்பட்டதாக இருக்கிறது. பொதுவாக ஆளும்வர்க்கச் சித்தாந்தம், அன்றைய ஆளும் சித்தாந்தமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டும், சமூக வளர்ச்சியின் போக்கை அறிந்து கொண்டும், அன்றைய மற்றும் தொலைதூர திட்டங்களை அமைத்தும் செயல்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாத வழியில் அமைந்த விஞ்ஞான கம்யூனிசம் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாகும்.

_______________________________________________________________________

22/07/2016

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
ஜாக்மதி ஜேங்குவ்ன் ( Jagmati Sangwan) என்ற சிபிஐ எம் மத்திய கமிட்டி உறுப்பினர் அக்கட்சியின் கலகக்காரர் என்று இப்போது அறியப்படுகிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்பு அவர் மத்திய கமிட்டி உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். அவரை அக்கட்சி நீக்கம் செய்துள்ளது. காங்கிரசுடன் கூட்ட இல்லையா இதே நிலைபாட்டிலிருந்துதான் CPI(M) CPI யிலிருந்து விலகியது 1964 க்கு பிறகு சில மாநில சட்ட மன்றத்தை கைபற்றிய இந்த போலிகள் செய்தது என்ன? தளி ராம சந்திரன் போன்ற மாப்பியாவை வளர்த்து சாதனை புரிந்தது மட்டுமே!!!! இதேபோல் ஜாக்மதியும் எதிர்க்கும் காங்கிர்சுடன் கூட்டு தவறு எங்கிறிந்து கூறுவாரா? 
இவரை போன்றே இ.க.க லிருந்து விலகி புரச்சிக்குவித்திட்ட ஒரு தோழரின் வார்த்தையை இங்கே பதிவு செய்கிறேன் நாளை அதாவது திங்கள் தொடருவோம் மற்றவையை........சி.பி (22/07/2016)

நாம் இந்த சட்டமன்றத்திற்க்கு வரும்போது சிலர் பட்டினிப் போராட்டத்தை நடத்துவதையும், சம்பள உயர்வு கோரி மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது, இவர்களுக்காண தீர்வு தடியடி அல்லது கைது நம்மிடம் திட்டமோ தீர்வோயில்லை. இத்தனை ஆண்டுகளில் அரசானது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நடுத்தர மக்களிடையே நம்பிக்கையையும் அமைதியையும் நிலை நாட்ட முடிந்ததா? மக்களின் மீதான நெருக்கடி தீவிரம் அடைந்து கொண்டேயுள்ளது. இதனை அறிய மாநில மத்தி அரசின் செயல் திட்டங்கள் பற்றிபார்ப்போம்; மாநிலத்தின் பொருளாதாரம் மாநில அரசிடமில்லை அப்படியெனில் மத்தியரசிடம் உள்ளதா என்றால் அங்கேயுமில்லை அப்படியெனில் யாரிடம் உள்ளது தோழர்களே? இதனை தன் சட்டமன்ற நடவடிக்கையில் பேசிய தோழர் தனது சேவை மக்களுக்கானது அல்ல ஆகவே இந்த பாராளுமன்ற பாதையை புறக்கணிக்கிறேன் என்று புரட்சிக்கான பாதையை தேர்ந்தெடுத்தார்..... இதனை விரிவாக எழுதுவேன் வரும் நாட்களில்....
தற்பொழுது ஜாக்மதியின் எதிர்ப்பு பற்றிபார்ப்போம்:-
Marxist Leninist Articles and Publications's photo.

CPI M கட்சிக்குள் எழுப்பப்படும் கேள்விகள்
====================================
https://www.facebook.com/jagmati.sangwan?fref=ts
ஜாக்மதி ஜேங்குவ்ன் ( Jagmati Sangwan) என்ற சிபிஐ எம் மத்திய கமிட்டி உறுப்பினர் அக்கட்சியின் கலகக்காரர் என்று இப்போது அறியப்படுகிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்பு அவர் மத்திய கமிட்டி உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். அவரை அக்கட்சி நீக்கம் செய்துள்ளது.
அவர் அளித்துள்ள செய்தியில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மேற்கொண்டபுரிதல்' கட்சி வழிக்குப் புறம்பானது என்று அவர் சொல்லியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்க சிபிஐ எம் கட்சி ஒட்டுமொத்த கட்சியையும் பிளாக் மெயில் செய்து “'மென்மையான' பாதையை மேற்கொள்ளும்படி கட்சியை நிர்ப்பந்தம் செய்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜக்மதி ஹரியானா சிபிஐ எம் கட்சியின் தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாமல், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர்.
அவரின் விலகலும் அதனைத் தொடர்ந்து அவர் நீக்கம் செய்யப்பட்டதும் அக்கட்சிக்குள் நிலவும் குழப்பமான நிலையைப் பிரதிபலிப்பதாக பத்திரிகைகள் எழுதின.
இரண்டு வழிகள் முட்டிக்கொள்வதாக தெரிகிறது. விசாசகப்பட்டினம் காங்கிரஸ் படி பார்த்தால் காங்கிரசுடன் கொண்ட (மேற்கு வங்க) சரிகட்டுதல் தவறானது என்பது ஒன்று. அது கட்சி வழியுடன் இசைந்ததாக இல்லை என்ற கருத்து அரசியல் தலைமைக் குழுவின் சிறுபான்மையாக இருக்க, அது கட்சி வழியை மீறியதாகும் என்ற கருத்து அக்குழுவின் பெரும்பான்மையாக இருந்தது என்று ஜக்மதி சொல்லியுள்ளார்.
அரசியல் தலைமைக் குழுவின் சிறுபான்மை கருத்தை சிபிஐ எம் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் யெச்சூரி மத்திய கமிட்டியில் முன் வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ள்ளார். மத்திய கமிட்டி கூட்டத்தில் சுற்றுக்கு விடப்பட்ட பெரும்பான்மை கருத்து மேற்கு வங்க தேர்தல் முடிவு கட்சி வழிக்கு புறம்பானது என்று சொன்னதாக ஜக்மதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கமிட்டி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் , மேற்கு வங்க தேர்தல் முடிவு கட்சிக்கு வழிக்குப் புறம்பானது என்றும், அது கட்சியின் வளர்ச்சியைத் தமது மாநிலங்களில் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்றும் ஜக்மதி சொன்னார்.
மேற்கு வங்க தேர்தல் தந்திரத்திற்கு எதிரான போக்கை அக்கட்சியின் மேற்கு வங்க பிரிவினர் அனுமதிக்கவில்லை ‘‘அச்சுறுத்தல்செய்தனர் என்றும் அவர் சொல்லியுள்ளார்.
மத்திய கமிட்டி கூட்டத்தின் இறுதியில், பெரும்பன்மை அரசியல் தலைமை குழு கருத்தில் இருந்தவழி விலகல்என்ற கருத்துக்குப் பதிலாக, ‘ஒத்துப்போகவில்லை என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.
காங்கிரசுடன் மேற்கொண்டபுரிதல் கட்சி வழியிலிருந்து விலகுவது பற்றிய மிக மோசமான உதாரணம் என்றும், அதன் காரணமாகத்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை தம் கட்சி தழுவியது என்றும், முதலாளித்து கட்சிகளுடன் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்ப வாதக் கூட்டணியை மக்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறார்கள் என்றும் ஜக்மதி கடுமையாக விமர்சித்துள்ளார். அக்கட்சிமேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கொண்ட தேர்தல் உறவை ஆதரித்தும் மத்திய கமிட்டியின் நிலைக்கு எதிராகவும் மாநிலத் தலைவர்கள் பலர் பேசுவது அவர்கள் மக்களின் விருப்பத்திருந்து தனிமைப் பட்டிருப்பதைக் காட்டுகிறது“, என்றும் அவர் சொன்னார்.
கட்சியிலிருந்து தான் விலகியதற்கான காரணம் கருத்தியல் பிரச்சனைதான் என்று சொன்ன அவர்கட்சியின் நலனையும் மக்களை நலனையும் பாதிக்கும் வழியைப் பின்பற்ற எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை”, என்று சொன்னார்.
Comments
Ameeth K A
Ameeth K A காங்கிரசுடன் சி.பி.எம் கூட்டு சரியானது எனும் கட்சியின் சிறுபான்மை கருத்தை ஏற்காவிட்டால் விலகி விடுவோம் என்று மே.வங்க மூத்த தலைவர் பிமன் போஸ், மாநில செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
http://m.timesofindia.com/.../articleshow/52859541.cms
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQAS795hS8LJ0tEa&w=90&h=90&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fphoto%2F52859541.cms&cfs=1&upscale=1&sx=55&sy=0&sw=277&sh=277
timesofindia.indiatimes.com
தோழர்களே 1967 க்கு பின CPI மற்றும் CPI(M) தத்துவார்த்த நடைமுறையை எதிர்த்து பல தோழர்கள் நக்சல்பாரி இயகக்ங்களில் செல்வதும் அதெநேரத்தில் கட்சிக்குள் இருந்து கட்சியின் நிலைபாட்டை விமர்சிப்பவர்களை தமிழகத்தில் ரவுடி தேவரத்தின் கூலிபடையிடம் காட்டி கொடுத்து பல கொடுமைக்கு உட்படித்திய வரலாறு உண்டு.
இப்படி தன் இயக்கத்தை தத்துவார்த்த ரீதியாக கட்டிகாக்க முடியாத பாராளுமன்ற பாதம் தாங்கிகளான போலிகள், பதவி போதையில் மக்களை மறந்ததுடன் மார்க்சியத்தையும் திரித்து முதலாளித்துவ பாணியில் வளர்ந்து கொண்டுள்ளனர்.... தொடர்வோம் நட்புடன் தோழர்களே.....சி.பி


https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xfa1/v/t1.0-1/c7.7.50.50/p64x64/11083648_10205241490211206_1445237142894594633_n.jpg?oh=61df0a3fe63fd5c146ca36d73b8efe62&oe=58316CA5&__gda__=1474914701_83bb3b6c61b6b387f5acb5d99a9c2a50

Mathi Vanan added 2 new photos.
முதலாளித்துவத்தை விரும்பாத பிஜேபி!
++++++++++++++++++++++++++++++++++++
இரகுராம் ராஜன் கம்யூனிஸ்ட் அல்ல. முதலாளித்துவ கருத்தியலாளர். முதலாளித்துவம் முதலாளித்துவத்தை அழித்துவிடக் கூடாது என்ற கருத்துள்ளவர். கள்ளக்கூட்டு முதலாளித்துவத்திற்கு (Crony Capitalism) எதிரானவர். சரியான முதலாளித்துவம் மிகச் சிறந்தது என்ற கருத்துள்ளவர்.
Mathi Vanan's photo.
Mathi Vanan's photo.

Sangwan attacks Yechury, party calls her ‘unstable’

TNN | Jun 22, 2016, 02.00 AM IST
http://timesofindia.indiatimes.com/thumb/msid-52859548,width-400,resizemode-4/52859548.jpg
NEW DELHI: Former CPM member Jagmati Sangwan, who resigned from the party on Monday, launched a scathing attack on general secretary Sitaram Yechury as the 'author' of the party's tie-up with Congress in West Bengal in violation of its political line.

In a Facebook post, Sangwan, who worked with the party for more than three decades, alleged that in the three-day Central Committee meeting, Yechury deliberately ignored the majority view of the politburo that saw the electoral tie-up with Congress as a "violation".

Meanwhile, the party leadership remained dismissive of Sangwan with one politburo member even calling her "unstable". Her exit has also started a mini factional war in the party. While a powerful section thinks Sangwan will have to move out of All India Democratic Women's Association (AIDWA) since it is the women's wing of CPM from which she has resigned, some think Sangwan can still work.

A party senior said Sangwan was acting at the behest of a few senior members. Sangwan also alleged that two CC members blackmailed the party that if the minority view is not accepted they will resign from the party. Sources said these two were Biman Bose and West Bengal state secretary Suryakanta Mishra.


Sangwan said the majority PB note presented in the CC meeting called the electoral tactics "violation of the party's political line". But she said the minority view prevailed. She said, the overwhelming view was against electoral tie-up with Congress. "In spite of the threat, more than two third of the CC members spoke how the electoral tactics was indeed a violation of the party line and how this is badly affecting the party. Yet, the final PB note amended the majority note and replaced 'violation' with 'not in consonance'. This was done by putting aside the majority opinion of the CC and in effect this meant that no responsibility would be fixed for the violation of the line," she said.

Top Comment

Dissent voice raised against LEft leadership /. Good for IndiaSaranathan Lakshminarasimhan

Sangwan said the open "understanding" between Congress and Left in Bengal was the "worst example of violation of party line". "I feel the election results are only a reflection of complete rejection of this opportunistic alliance with a bourgeois party that has a history of inflicting severe violence against our own cadre in West Bengal. The fact that even after election results several state leaders have made public statements upholding their alliance with Congress and against Central Committee only goes on to show how cut off they are from the wishes of the masses," she said.


Making it clear that she is "extremely emotional" about her ties with AIDWA, Sangwan said she has "no disagreement with the party programme and political line".

Stay updated on the go with Times of India News App. Click here to download it for your device.
RELATED

மாமல்லன்

விமலாதித்த மாமல்லன்

Tuesday, July 19, 2016

ஆண்ட்டி ஒரு கொலை செய்தாள்

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னுமாஜா ஹதீஸ் எண்: 2443

நேற்று மாலை நந்தம்பாக்கம் S4 காவல் நிலையம் சென்றிருந்தேன். விலாசினி ரமணி (விலாசினி) விவகாரத்தில் கைதாகி இருக்கும் OLA டிரைவர், புதன் கிழமையன்று பிணையில் வெளியில் வரக்கூடும். அதற்கு முன்பாக, இந்த விவகாரத்தில் ஆவண ஆணவ ரீதியாக கிடைத்திருக்கும் ஆதாரங்களை உங்கள் முன் வைப்பது ஒரு எழுத்தாளனாக என் சமூகக் கடமை என்று நினைக்கிறேன்

ஆவணம் -1

6 கிலோ மீட்டர் தூரத்தை ஓலா ஓட்டுனர் 8 நிமிடத்தில் கடந்திருக்கிறார். (வேகம் = தூரம் / நேரம் என்று பார்த்தால் 6 / 8 = 0.75 X 60 = 45 கிமீ) சனிக்கிழமை இரவு 9:30-10:00 மணி என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் டிராபிக் நெரிசலற்ற சாலையில் 45 கிலோமீட்டர் வேகம் என்பது காருக்கு நார்மல் வேகம் கூட இல்லை என்பதை ரெகுலராகக் காரில் செல்வோர் ஒப்புக்கொள்வார்கள். எப்போதும் ஆட்டோவிலேயே போய் பழக்கப்பட்டவர்களுக்கு, ஒலா சீப்பாக ஆட்டோ ரேட்டுக்குக் கொஞ்சம் அதிக செலவில் கிடைக்கிறதே என்பதற்காகக் கார் சவாரி செய்வோருக்கு இதுவே படுபயங்கர வேகமாகத் தெரிவதும் ஆச்சரியமில்லை. ஆட்டோ செலவில் காரில் போக ஆசைப்பட்ட விலாசினி ரமணிக்கு இப்படித் தோன்றியதுதான் அந்த ஓலாக்காரரின் போதாத காலம்

ஆவணம் - 2

கிண்டி பாலத்தில் ஏறி இறங்கியதும் வண்டியை ஓரங்கட்டச் சொல்லியிருக்கிறார் விலாசினி. வண்டியின் மீட்டர் கட் செய்யப்படுகிறது. இது பதிவாகி இருக்கிறது. விலாசினி ரமணி தம் பதிவில் பொய் சொல்வதுபோல் ஓலா ஓட்டுனர் வண்டியைத் தாமாகவே ஒரங்கட்டி நிறுத்தியிருந்தால் அவர் ஏன் மீட்டரைக் கட் செய்யப்போகிறார். பஞ்சாயத்து முடியும் வரை மீட்டர் ஓடிக்கொண்டு இருப்பது அவருக்கு லாபம்தானே. வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால், வண்டியருகில் விலாசினியைக் காணவில்லை. இறங்கிப் பார்க்கிறார். நன்றாகக் கொஞ்சம் தூரம் தள்ளிச் சென்று போய் நின்றுகொண்டு கைபேசியில்யாருடனோபேசிக்கொண்டு இருக்கிறார் விலாசினி. அவர் பேசி முடிக்கட்டும் என்று இடையூறு செய்யாமல், தமது ஒலா கார் அருகிலேயே நின்றுகொண்டு இருக்கிறார்

நேரில் பார்த்த சாட்சியம் - 1

ஆட்டோ வருகிறது. விலாசினி கை காட்டி நிறுத்துகிறார். விலாசினி அருகில் வந்து, அதுவரை சவாரி செய்ததற்கான பணம் 127 ரூபாவைக் கேட்கிறார். அதற்கு, M.A. English Liturature படித்தவரான அவரைப் பார்த்து,  பொறுக்கி என்கிறார் இலக்கியப் புத்தகங்களின் பதிப்பாளரான விலாசினி ரமணி அவர்கள். இதற்குக் கழுத்தை அறுத்துடுவேன் என்கிறார் அவர்.

இவை அனைத்தையும் சொல்கிறார் அந்த ஆட்டோக்காரர்

எப்போது

விலாசினி ரமணியை வீட்டில் கொண்டுபோய்ப் பாதுகாப்பாய் விட்டுவிட்டு திரும்பி வருகையில் கூடப்போன போலீஸ்கார் என்ன நடந்தது என ஆட்டோக்காரரை விசாரிக்கையில்

இப்போது புரிகிறதாசம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சியமான ஆட்டோ டிரைவரை ஏன் போலீசிடம் விசாரித்துப் பார்க்கச் சொல்லவில்லை விலாசினி ரமணி என்கிற அப்பாவி அபலையான உத்தமசிகாமனி என்று.

அதுமட்டுமில்லாது தாம்தான் முதலில் அந்தக் கார் டிரைவரைப் பொறுக்கி எனச் சொல்லி அவனைக் கழுத்தை அறுத்துடுவேன் எனச் சொல்லத் தூண்டியது என்கிற உண்மையைச் சொன்னால் எங்கே தன் ஆகாத்தியப் பசப்பல் எடுபடாதோ என்கிற பதற்றத்திலேயே  அதை மறைத்துவிட்டார். தூ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

தாம் அந்த ஓலா காரோட்டியைப் பொறுக்கி என்று சொன்னதை, தம் பேஸ்புக் பதிவு உடபட பத்திரிகை நண்பர்கள் மீடியா என எங்குமே பதிவு செய்யாமல் சாதுரியமாய்த் தவிர்த்துவிட்டார் விலாசினி. வெள்ளையா இருக்கறவோ பொய் சொல்ல மாட்டா என அவரது கன்னங்கரேல் நண்ப நண்பிகள் பத்திரிகையுலக பரமாத்மாக்கள் உட்பட எவரும், கழுத்தை அறுத்துடுவேன் என அவன் சொல்லும் அளவுக்கு நீ என்ன சொன்னே என எவருமே கேட்கவில்லை. தூத்தெறி தெரு நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

கழுத்தை அறுத்துடுவேன் என்று சொல்லவில்லை என் குடும்பமே தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கவேண்டியதுதான் என்றுதான் சொன்னேன் என்று போலீசிடம் பொய் சொல்லியிருக்கிறார் ஓலா வண்டியோட்டி. தம்மால் இவ்வளவுதான் முடியும் என்பதால் 3600 ரூபாய் வாடகையில் எங்கோ முடிச்சூரில் வசிக்கும், தமது வியர்வையான 127 ரூபாயையும் கொடுக்காமல் அடாவடித்தனம் செய்யும் ஒரு பொறுக்கிப் பெண்மணி, தன்னை மோசம் செய்ததோடு அல்லாதுத் தன்னைப் பொறுக்கி என்று வேறு திட்டுவதா என்கிற கோபத்தில், தாம் சொல்கிற வார்த்தையின் விபரீதம் உணராது, கழுத்தை அறுத்துடுவேன் என்று சொன்னதும் அப்படித் தான் சொல்லிவிட்டது எவ்வளவு பெரிய விபரீதாய்த் தனக்கு எதிராக ஆகிவிடும் என்பதை உணர்ந்ததும், அதற்கு சாட்சியமாய் ஆட்டோ டிரைவர் இருக்கிறார் என்பதை மறந்து பொய் சொல்வதும் இயல்புதானே. இதைத் தவறல்ல என்று எந்த மடையனும் சொல்ல மாட்டான். அதே நேரம் இதைத் தம் கழுத்தை அறுக்க கையில் ஆயுதத்தோடு நெருங்கினான் என்பதைபோல் ஃபேஸ்புக்கில் பதிவு போட்ட விலாசினியின் சதிராட்டம் அயோக்கியத்தனமானது இல்லையா. அதைத் தீர விசாரிக்காத பத்திரிகைப் பன்னாடை நண்பர்கள் ஊதிப் பெருக்கி அச்சிட்டு ஒளிபரப்பியது அக்கிரமம் இல்லையா.

ஆவணம் - 3 

ஆட்டோவின் பின்னாலேயே அந்த ஒலா தொடர்ந்து வந்ததைப் பார்த்து விலாசினி பயந்தது பேரனாய்ட் என்றால் அதைப் படித்து இணையம் பதறியது எந்த நாய்டு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இந்த சம்பவம் நடந்த உடனேயே ஒலா காரோட்டிக்கு சவாரி கிடைத்து விடுகிறது. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் விலாசினி இறங்கியதும் ஓலா மீட்டர் குளோஸ் செய்யப்படுகிறது. வெளியில் வந்து ஓட்டுன இளைஞர் நிற்கையில், விலாசினி கார்த்திக்குடன் பேசி முடித்ததும் உடனேயே அடுத்த சவாரி ஓலாவுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால் விலாசினியோ ஆட்டோ வர பத்துப் பதினைந்து நிமிடம் ஆனது என்று புளுகுகிறார். அயோக்கியர்கள் ஆயிரம் கெடுதல் செய்தாலும் ஆண்டவன் இருக்கிறான் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த அப்பாவி இளைஞனுக்கு உடனே சவாரி கொடுத்து ஆதாரத்தை உருவாகிக்கொடுக்கிறான் ஆண்டவன்.

//பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டான். நானும் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் இறங்கிவிட்டு வேறு வாகனத்திற்காகக் காத்திருந்தேன்.

இதற்கிடையில் கார்த்திக்கை அழைத்து நடந்ததை விவரித்து ஓலா அப்ளிகேஷனில் 'சேவை மோசம்' என்று புகார் அளிக்கச் சொன்னேன். இதெல்லாம் நடந்தபொழுதும் அந்தக் கார் அங்கேயே நின்றுகொண்டிருக்கவும் எனக்கு லேசாக பயமெழ ட்ரைவர் காரிலிருந்து இறங்குகிறானா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோ வரவும் அவருடன் சவாரி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அந்த ட்ரைவர் என்னருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. வந்தவன் எந்த மரியாதையுமின்றி 'காசு எவ தருவா' என்று ஆரம்பித்தான். நான் அவனிடம் சற்று கடுமையாக 'இறக்கிவிட்டது நீதான். ஒழுங்காகவும் வண்டி ஓட்டவில்லை. கம்பெனியில் புகார் அளித்தாகிவிட்டது, வம்பு செய்யாமல் போய்விடு,' என்றதற்கு அசிங்கமாக என்னைப் பார்த்துக் கை ஓங்க வந்தான். உடனே நான் அந்த ஆட்டோக்காரரிடம் வண்டியை வேகமாக எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே ஏறுவதற்குள் , 'கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?' என்று படு பயங்கரமாக முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டினான். அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல், அந்த அரையிருளில் கவனிக்கவும் முடியாமல், 'அப்படி எதுவும் செய்துவிட முடியாது, நான் நேராக போலீசிடம் புகார் அளிக்கப்போகிறேன்,' என்றதற்கு, என்ன வேண்டுமானாலும் செய்துகொள், போடி என்று அசிங்கமாக சைகை காண்பித்தான். அதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டேன்.//

இவ்வளவு நடக்க வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் பிடிக்கும்.

விலாசினியே கூறுகிறார். வண்டியிலிருந்துஇறக்கிவிடப்பட்டபோது மணி பத்து. பத்துப் பதினைந்து நிமிடம் கழித்து ஆட்டோ வருகிறது. அதற்குப் பிறகு சர்ச்சை தாக்குதல் எக்செட்ரா எக்செட்ரா. அதன் பிறகு ஆட்டோவில் ஏறி ஆயுதம் ஏந்திய ஒலா பின் தொடரச் செல்கையில் என்ன மணி. விலாசினி ரமணியே சொல்கிறார்.

//மணி பத்தரை போல் இருக்கும்.//

அந்த இளைஞன் ஓலா மீட்டரைக் கட் செய்த நேரமும் அடுத்த சவாரி கிடைத்த நேரமும் என்ன என்பது இந்த வழக்கின் முக்கியமான ஆவணம். விலாசினியின் பொய்களைப் பசப்பல்களைத் தகர்த்து எறிவதற்கான மிக முக்கியமான ஆதாரம். இதைத்தான் அநாதைகளுக்கு ஆண்டவன் இருக்கிறான் என்றேன்.

ஆவணம் - 4

சரி ஓலாவுக்கான அடுத்த சவாரி எங்கே

சைதாப்பேட்டை கோர்ட் அருகில்

அண்ணா பல்கலையில் இருந்து, விலாசினி ஆட்டோவில் வளசரவாக்கம் செல்லவும் இவர் அடுத்த சவாரிக்காக சின்னமலை வழியே சைதாப்பேட்டைக் கோர்ட்டுக்குச் செல்லவும் செல்லம்மாள் கல்லூரி வரை இருவரும் ஒரே சாலையில் அல்லவா சென்றாக வேண்டும். இதைத்தான்

//பின்னாலேயே அவனும் காரைக் கிளப்பி வந்துகொண்டிருந்தான்.//

ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஒலா காரில் தம் கழுத்தை அறுக்க அவன் வந்துகொண்டு இருந்ததாய் எண்ணவைத்து, நம்மைப் பதற வைக்கிறார் அம்மையார். பெண்களுக்கு என்றால் பிரத்தியேக ஆர்வத்துடன் மருத்துவம் பார்க்கும் எனக்குத் தெரிந்த நல்ல மனநல மருத்துவரிடம் சிபாரிசு செய்யவா

இந்துப் பத்திரிகையின் பொறுப்பின்மை -1

அன்றாடம் ஆயிரம் வெட்டுக்குத்து ரத்தம் எனப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு, விலாசினி பிரச்சனை சல்லி பெறாத சாதாரண வாய்த்தகறாரு சப்பை மேட்டர் என்றுதான் தோன்றியிருக்கிறது. அதிக பட்சம் இருவரையும் நேரில் அழைத்து மன்னிப்பு கேட்க வைப்பதோடு முடிந்திருக்க வேண்டிய சமாச்சாரம், கைது வரை சென்றதற்கு முக்கியக் காரணம் எங்கு பார்த்தாலும் இறைந்து கிடக்கும் அரைவேக்காட்டு விலாசினிகள்தாம். என்ன ஏது என்றே தீர விசாரிக்காமல், அந்த ஒலா டிரைவர் என்னதான் சொல்கிறார் என்று கேட்டுதான் பார்ப்போமே என்று ஓலாவைத் தொடர்புகொள்ளும் சிறு முயற்சியைக்கூட எடுக்காமல், விலாசினியின் பதிவில் ஸ்வாதி சூப்பர் இம்ப்போஸ் செய்யப்பட்டுத் தெரிய, அதிதீவிர சமூகப் பிரக்ஞையுடன், விலாசினி ஃபேஸ்புக்கில் எடுத்திருந்த வாந்தியை அப்படியே வழித்து ஆங்கிலமாக்கி அச்சில் வைத்துவிட்டார் இந்துவில் நிருபராயிருக்கும் இன்னொரு விலாசினியான S. Poorvaja. 

இந்துப் பத்திரிகையின் பொறுப்பின்மை -2

சனிக்கிழமை நடந்த சம்பவத்தை சண்டே என்று எழுதி வைத்திருக்கிறது இந்தப் பூர்வஜா சுந்தர் என்கிற முண்டம்.
பத்திரிகையின் செய்தித் தலைமையை இம்ப்ரஸ் செய்து தான் எழுதிய ஸ்டோரியை எப்படியாவது வெளியிட வைக்க,  இது போன்ற பொய்கள் வேறு இடையிடையே. புதன் கிழமை மதியம்கூட 700ஐத் தாண்டாத ஷேர்களை, செவ்வாய் மாலையே 1000த்தைத் தாண்டிவிட்டதாய் புளுகி இருக்கிறது இந்தப் புண்ணாக்கு. இதுகளிடமிருந்துதான் நாம் அறத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
https://4.bp.blogspot.com/-fReya_hJblI/V43qPErrmWI/AAAAAAABla8/SKY5FQydLk0oq3pp9PtVhRhB6womm0BKgCLcB/s280/Poorvaja%2BS%2BThe%2BHindu%2BReporter.jpg
இதோ அடுத்த வார செவ்வாய்க் கிழமை. இன்றுதான் 1150 ஷேர்களைத் தொட்டிருக்கிறது இந்தப் பதிவு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirmwAA1gR8Q0AuHrwkD2riHoz25DNwRb3Djrib-VdN8WDsPds77h_i8VEon5PRE3Yue4TogxBH9_S5MBEXBR7T5F47LJv-J8u9KOEIy1HDLoWTSSAMVpfJt9ZpTQkt7xnphrhyxjg0DN0d/s280/Poorvaja+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BE.JPG
போதுமா பூர்வஜா சுந்தரின் புருடாவுக்கான ஆதாரம். தன் பெயரில் பரபரப்பான ஒரு செய்தி வெளிவர எந்த அப்பாவி ஜெயிலுக்குப் போனால் என்ன. ஒலா ஒலா என்று உரக்கக் கத்துபவர்களே இப்படி ஒரு பக்கத்துச் செய்தியை மட்டும் வெளியிட்டு ஒரு அப்பாவியைச் சிறைக்கு அனுப்பக் காரணமாக இருந்த இந்தப் பூர்வஜா என்கிற இன்னொரு போலி விலாசினியை இந்துவை விட்டு நீக்கச் சொல்லிக் கேட்பீர்களா.

ஈவு இரக்கம் என்றால் என்னவென்று அறியாத விளம்பர வெறிகொண்டு திரியும் சின்மயி விலாசினிகளுக்கு வேண்டுமானால் ஒருவனை ஜெயிலுக்கு அனுப்புவது சும்மா காப்பி குடிப்பதைப் போல சாதாரண விஷயமாக இருக்கலாம் The Hindu போன்ற பத்திரிகைகளுக்கு, உண்மையில் என்ன நடந்தது என்று ஆழ விசாரிக்கும் எந்த சமூகப் பொறுப்பும் இல்லையா.

ஏன் இதைப் பண்ணிப்பண்ணி சொல்ல வேண்டி இருக்கிறதென்றால், நேற்று இரவு நான் நந்தம்பாக்கம் சென்று மரம் செடி கொடிகளிடமெல்லாம் பேசி சேகரித்துக் கொண்டு வந்தவற்றைச் சொல்லி எழுதப்போகிறேன் என்று கூறியதும், என்ன அநியாயம் என்று ரத்தம் கொதித்தார் ஒரு பெரிய பத்திரிகையாள நண்பர். எழுதி முடித்ததும் அனுப்பி வைக்கிறேன், எவ்வளவு வேண்டுமானாலும் எடிட் பண்ணி சுருக்கி வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றேன்.

அவரோ, சார் உங்க ப்ளாக்லயே வெளியிடுங்க. கண்டிப்பாப் படிக்கிறேன். ஆனா இப்ப பப்ளிக் இருக்கிற ஸ்வாதி மூட்ல இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது சார் என்றார்.

இதைத்தான் விலாசினி ரமணி கேடியாய் தமக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் என்று இப்போது புரிகிறதா.

இதுபோன்ற ஒரு செய்தி இந்துவில் வந்துவிட்டால் மற்ற ஊடகக்காரர்களுக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை நெருக்கமாய்க் கன்கூடாகக் காணும் வாய்ப்பும் அனுபவம் இருப்பவர்களால் மட்டுமே உணரவும் எடுத்துச் சொல்லவும் முடியும்.

மூன்று நாட்களாய் இதைச் செய்தியாய் வெளியிட, இந்துவில் வந்ததையும் தாண்டி அப்டேட்டடாய் இன்னும் ஏதாவது கிடைக்குமா எனத் தவியாய்த் தவித்துக் கொண்டு இருக்கும் இன்னொரு இண்டர்நேஷனல் பத்திரிகையின் கரஸ்பாண்டண்ட், இன்று மதியம் செல்போனில் வந்து, என்ன சார் நந்தம்பாக்கம் போய்ட்டு வந்தீங்களே என்னாச்சு என்றார். எழுதிக்கிட்டு இருக்கேங்க என்றேன். உங்க, ’சங்கூதப்படும்ஸ்டேட்டஸ் பாத்துட்டுதான் சார் கேக்கறேன் என்னாச்சு என்றார். ’எல்லாவற்றையும்கூறினேன். நீங்களாவது ஊடகம் மூலமாக எதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன். சார், இப்ப மீடியா இருக்கிற மூட்ல இதையெல்லாம் நெகட்டிவா ஒன்னும் செய்ய முடியாது சார் என்றார்.

மீடியாவுக்கு, என்ன நடந்து என்கிற உண்மையைச் சொல்வது நெகட்டிவ், விலாசினி என்கிற பெண்ணியப் போராளியின் பொய்யை மெய்ண்ட்டென் பண்ணுவது பாஸிட்டிவ்.

அறச்சீற்ற முதத்தின் அற்பத்தனத்தின் அடையாளங்கள் - 1

தமது அறச்சீற்ற முகத்தின் அற்பத்தனத்தின் அடையாளமாக நிற்கும் இதுவே போலீசின் மேல் மட்டம் வரை அவருக்கு எதிராகத் திருப்பியிருக்கிறது என்பதை அறிய, விலாசினியின் மண்டை வீக்கம் குறைய வேண்டும்.

//துணைக்கு ஒரு ஏட்டை வீடு வரை அனுப்புகிறோம் என்று கடைசியாகக் கூறிவிட்டு ஆட்டோ ட்ரைவரிடம் ஏட்டை மறுபடியும் ஸ்டேஷனில் கொண்டுவந்துவிட கட்டளையிட்டார்கள்.//

இரவு பதினோரு மணி பக்கமாக ஆகிவிட்டதே பாவம் தனியாக எப்படி இந்தப் பெண்மணி ஆட்டோவில் வளசரவாக்கம் வரை போகும் என்று துணைக்கு ஆளை அனுப்பி வைக்கிறது போலீஸ். அதை ரொம்ப நுணுக்கமாய் விவரிப்பதைப் போல நக்கலடிக்கிறாராம் அம்மையார்.

உங்கள் வீடுவரை உங்கள் பாதுகாப்புக்காக வரும் போலீஸ்காரர் அந்த அகாத இரவில் திரும்பிவர வளசரவாக்க நாய்க் குலைப்பின் நடுவே வண்டி தேடிக்கொண்டு இருப்பாரா அல்லது அவர் ஓரு ஓலா புக்பண்ணிக்கொண்டு வரத்தான் முடியுமா. உங்களுடைய பாதுகாப்புக்காகக் காவலரைத்தான் கொடுக்க முடியும், அதற்கான செலவையும் அரசே ஏற்க நீங்கள் என்ன முதலமைச்சர் அம்மாவா.

ஆனைமேல குதிரை மேல அம்பாரி என காரில் வர ஆசைப்பட்டு ஏறி, வழியில் டிரைவரிடம் சும்மானாச்சுக்கும் எதாவது வம்பிழுத்து பாதியில் இறங்கி 127 ரூபாயையும் கொடுக்காமல் ஏமாற்றி சுருட்டி முடிந்து ஒசியில் சவாரி செய்து சொத்து சேர்க்கும் அல்ப்பங்களுக்குஆட்டோவில் உதவ வந்த போலீசைக் கொண்டுவிடும் செலவை ஏற்பது கழுத்தை அறுப்பதைப் போன்ற வாதையாகத்தான் இருக்கும்.

இவ்வளவு நுட்பமாய் எழுதத்தெரிந்த இலக்கிய பராக்கு பப்ளிஷருக்கு, தாம் பொறுக்கி என்று அந்த 28 வயதேயான ஓலா இளைஞனைத் திட்டியதுதான் அனைத்துப் பிரச்சனைக்கும் மூலகாரணம் என்பது மட்டும் மண்டையில் உறைக்காது.

அறச்சீற்ற முதத்தின் அற்பத்தனத்தின் அடையாளங்கள் - 2

வாய்க்கொழுப்புல இவ திட்டினா, காசும் கொடுக்காம திட்டவேற செய்யிதே சனியன்ங்கற கடுப்புல அவன் மிரட்டினான் என்கிற சப்பைப் பஞ்சாயத்து மேட்டர் இந்து பத்திரிகையில் படுபயங்கரக் கொலை மிரட்டல்போல வெளியானதும், அது சமூக அந்தஸ்து அதிகார மட்டங்களின் மனக்கண்ணில் நுங்கம்பாக்கக் காட்சியாய் விரிய கடுமையான அழுத்தம். அதன் காரணமாய் புகார் எடுத்துக்கொள்ள போலீஸ் விலாசினி வீட்டுக்கே செல்கிறது. அப்போதுதான் புதியதலைமுறை வந்து சென்றிருக்கிறது.

புகாரெல்லாம் எடுத்து முடிந்ததும் விலாசினி சொன்னதுதான் ஹைலைட்.

கேசு கீசெல்லாம் வேண்டாம். கோர்ட்டு கீர்ட்டுனுல்லாம் என்னால அலைய முடியாது. அந்தப் பையனைக் கூப்ட்டு சும்மா மிரட்டி விட்டுடுங்க போதும்.

என்னவொரு இரக்க குணம் என்று தோன்றுகிறதா.

இந்துவில் வந்தாயிற்று புதிய தலைமுறை வந்து வீடியோக்கூட எடுத்தாயிற்று நான் பேமஸாயிட்டேன் நான் பேமஸாயிட்டேன் நம்ம நோக்கம் நிறைவேறிடுச்சி. ஆனா... ஆனா... கோர்ட்டுப் படி ஏறி சாட்சி கூண்டுல நின்னா கிராஸ் எக்ஸாமினேஷன்ல என் வாழ்க்கை மொத்தத்தையும் நோண்டி நுங்கு எடுத்து விடுவார்களே ஈஸ்வரா என்று கோர்ட்டு சீன் சப் டைட்டிலுடன் ஓடத் தொடங்குகிறது.

உங்கள் பெயர்

விலாசினி ரமணி

ரமணி என்பது உங்கள் தந்தைப் பெயரா

இல்லை கணவர் பெயர்

உங்களுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதா. உங்களது ஃபேஸ்புக் தகவல் பக்கத்தில் நீங்கள் எங்கேஜ்டு என்றல்லவா கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் ப்ரொஃபைல் படத்தில் உங்களுடன் நெருக்கமாக இருப்பவர் யார்.

அது... வந்து...

மைலார்ட் இது குற்றம் சாட்டியவரின் ஃபேஸ்புக் தகவல் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட் மைலார்ட். டிஃபென்ஸ் தரப்பு சான்றாணையம்-1

மைலார்ட் என் கட்சிக் காரரின் தனி வாழ்க்கை இந்த வழக்குக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாதது எனவே இதை நான் ஆட்சேபிக்கிறேன்.

இல்லை மைலார்ட் இவைதான் இந்த வழக்கின் முக்கியமான ஆதாரங்கள். இவரது தனிப்பட்ட வாழ்வில் ஆண்களால் உண்டான காயங்கள் என்று இவர் பதிவே எழுதி இருக்கிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கையின் கசப்புகள் காரணமாகவே இவர் எந்த ஆணையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்பவர் மைலார்ட். அதனால்தான் என் கட்சிக்காரரை, இவர் காசும் கொடுக்காமல் ஏமாற்றியதோடு பொறுக்கி என்றும் திட்டி இருக்கிறார். அது ஏற்படுத்திய கோபத்தில் என் கட்சிக்காரர் சாதாரணமாய்க் கூறியகழுத்தை அறுத்துடுவேன்என்பது இவருக்கு ஆக்ஸா பிளேடாய்க் காட்சியளித்திருக்கிறது. எனவே இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஆண்களுடன் ஏற்பட்ட கசப்புகள் இந்த வழக்கில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

என்னைப் பார் என் அழகைப்பார் என ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டுக்கொண்டு லைக் ஷேர் அருமை சகோதரி, சூப்பர்மா, சாட்டையடி பதிவு தோழி எனக் கமெண்ட் வாங்குவதைவிட சுலபமானது, பொய்ப் புகார் கொடுத்து ஒரு அப்பாவியை ஜெயில் தள்ளுவது. அதுவும் பத்திரிகையும் நட்பும் சூழ இருந்தால் எதையும் மறைத்து எதையும் திரித்து எதையும் சாதித்துவிடலாம் என்று மமதையில் திரிவது இன்னும் சுலபம். வழக்கு என்று வந்தால் வாழ்க்கை பிரித்து மேயப்படும்.

இரண்டு சிறிய குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு, பல மைல்கள் தாண்டி எங்கோ மாநகரின் மறு கோடியில் இருக்கும் வருங்காலக் கணவரைப் பார்க்கச் சென்று பத்து மணியளவில் திரும்பி வருகிற பெண்மணியும் குழந்தைகள் தனியாக இருக்கின்றனவே இரவு வேறு ஏறிக்கொண்டு இருக்கிறதே என்கிற பதைபதைப்பில் இருக்கிற எந்தத் தாயும் காரோட்டியிடம் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் போப்பா குழந்தைங்க தனியா இருக்கு கொஞ்சம் வேகமாப் போப்பா என்று கெஞ்சுவாரா அல்லது மெதுவாகப் போ என நான் எவ்வளவு கூறியும் கார் ஓட்டுனர் வேகவேகமாகவே போய்க்கொண்டு இருந்தான், மெல்லச் செல்ல முடியாது எனத் தகறாரு செய்தான் என்பதைப் புகாராய்க் கொடுக்க இரவோடிரவாக ஏரியா ஏரியாவாய்ப் போலீஸைத் தேடித் திரிவாரா என்று குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல் முன் வைத்தால் நீதிபதி சட்டப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு இருப்பாரா இல்லை உள்ளூர சிரித்துக்கொண்டு இருப்பாரா.

இல்லாததையும் பொல்லாததையும் கூறி எவனை வேண்டுமானாலும் ஜெயிலுக்கு அனுப்பி வைப்பதுதான் இந்தக் காலத்துப் பெண் சைக்கோக்களுக்கு எவ்வளவு சுலபமான காரியமாய் ஆகிவிட்டது.

இணையத்தில் இதை இரண்டாவது முறையாய் பார்க்கிற துர்பாக்கியத்துக்கு ஆளாகியுள்ளோம். இரண்டு சமயங்களிலும் ஊடகங்கள் மேலோட்டமாகவே இதை அணுகி இருக்கின்றன என்பது அதைவிட துரதிருஷ்டம்.

ஆனால் இன்னமும் சில மனிதர்கள் அற்புதமானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தக் காரோட்டியைத் தெரியவந்து பத்து நாட்களே ஆகியிருக்கும்  அந்தக் கார் முதலாளி காஜா ஷெரிஃப் சொன்ன வார்த்தைகள் என்னைக் கண்கலங்க வைத்துவிட்டன.

ஏதோ கோவத்துல அந்தத் தப்பான வார்த்தையை சொல்லிட்டானே தவிர, அந்தத் தகப்பனில்லாத பையன் பாவம் ரொம்ப இன்னொசண்ட்டு சார். அவனைப் போயி ஜெயிலுக்கு அனுப்பி கிரிமினல் உலகத்தை அவனுக்குக் காட்டிட்டதை நினைச்சாதான் ரொம்ப கஷ்டமா இருக்கு சார். இந்த நாலு நாள்ல அவன்கிட்ட யார் யாரு என்னென்ன பேசினாங்களோ எப்படியெப்படி வெறுப்பேத்தினாங்களோ தெரியல. போனமாதிரியே அவன் அதே மனுஷனா திரும்பி வரணுமேன்னுதான் சார் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு.

இவர் இப்படி என்றால், மனிதாபிமானமுள்ள காவலர்கள் ஒரு படி மேலே சென்றுவிட்டனர்.

சார் அந்தப் பையன் ஓட்டின காரோட ஓனர் முஸ்லீம் சார். ரொம்பக் கடவுள் பக்தியுள்ள ஆளுங்க. வரச்சொன்ன இடத்துக்கு வண்டியோடவும் அந்தப் பையனோடவும் வந்து நின்னாரு சார். வக்கீல்லேந்து எல்லா செலவையும் அவருதான் பாத்துகிட்டு இருக்காரு. ஒரு சாதாரண மனுசரா அவர் இவ்ளோ செய்யும்போது இவ்ளோ அதிகாரம் இருந்தும், இந்துல வந்துடுச்சிங்கிறதால உண்டான பிரஷர்ல நம்மளால எந்த உதவியும் செய்ய முடியிலையேனு நினைச்சாதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு.

ஆமாசார். இந்த விலாசினி ரமணியோட ஃபேஸ்புக்கைப் பாக்கற கொசு மூளைக் காரனுக்குக்கூட நல்லா தெரியும் இந்தம்மா எப்ப எப்படி மாத்திப் பேசும்னு அதுக்கே தெரியாது.

அதுதான் சார் எங்க பிரச்சனையே. இப்ப அவனை சும்மா விட்டுருனு சொல்லிட்டு, நாளைக்கே நான் கம்ப்ளெய்ண்ட் குடுத்தும் போலீஸ் எந்த ஆக்ஷனும் எடுக்கலைனு மீடியா வெளிச்சத்துல சொல்லிட்டாங்கன்னா எங்க கதி என்னா ஆவறது.

இந்தம்மாள் எந்த இழவும் தெரியாமல் கார்ப்பொரேட் கார்ப்பொரேட் என்று ஓஸி ஃபேஸ்புக்கில் கார்ப்பொரேட்டைப் பார்த்து போலீஸ் பம்முகிறது என்று உள்ளே என்ன நடக்கிறது என்பது புரியாமல் உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கிறது. ஓலா, காஜா ஷெரீஃபின் காரை விலக்கிவிட்டது. கார் டிரைவர் உள்ளே இருக்கிறார். எவ்வளவு நியாயமற்ற விரயங்கள் ஒரு பெண்மணியின் அரைவேக்காட்டுப் பெண்ணியப் பீற்றலுக்காக

இவ்வளவையும் மீறி, பத்து நாள் முன்பு யாரென்றே தெரியாதவனை சொந்தத் தம்பியைப் போல் புழல் சிறைவரைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டுவிட்டு வருகையில் காஜா ஷெரிஃப் சொன்னது இதுதான்.

எதைப் பத்தியும் கவலைப்பட்டு மனசை விட்டுடாதே. எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சுக்கோ. கடவுள் நமக்கு ஏதோ நல்லது செய்யிறதுக்காகதான் இதையெல்லாம் செய்யிறார்னு நினைச்சுக்கிட்டு தைரியமா இரு.

இவர் மனதார கவலைப் பட்டதைப் போலவே, நீதியற்ற முறையில் தான் தண்டிக்கப்பட்டதற்காக தன் எதிர்காலத்தை இழந்ததற்காக வன்மம் கொண்டு முரடனாகி வேறு எந்தப் பக்கமும் போய்விடாதிருக்க, உள்ளே சென்ற இளைஞன் செல்லும்போது எப்படி இருந்தானோ அதைப் போலவே திரும்பி வந்து புது வாழ்வு தொடங்க எந்த வகையிலேனும் சிறிய உதவியேனும் செய்யவேண்டியது ஒரு எழுத்தாளனாக மட்டுமின்றி ஒரு மனிதனாகவும் என் கடமை என்று நான் எண்ணுகிறேன்.

எனவே, நாளைக்கு பெயிலில் வெளியில் வரவிருக்கும் அந்த இளைஞனின் மறுவாழ்வுக்காக என்னால் இயன்ற ரூபாய் 5,000த்துடன் இந்த நிதியைத் தொடங்கிவைக்கிறேன். என் நாணயத்தின் மீது நம்பிக்கையுள்ளோர் இயன்றதைக் கொடுத்து உதவுங்கள். உதவியோர் கூடவே எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதை ஒரு SMSல் +91 9551651212 என்ற எண்ணுக்கும் தெரிவித்து கணக்கு வைத்துக்கொள்ள உதவுங்கள்.

Name: C. Narasimhan

Bank: State Bank of India

Branch: Karpagam Gardens

SB A/c no.31822208041

IFSC: SBIN0014625

MICR: 600002195

Bank Phone: 044 24460112

madrasdada@gmail.com 12:36 PM
CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
(29/06/2016 அன்று cpchengathir பெயரில் FB வெளியிட்டேன்)

தோழர்களே நான் இந்த பதிவை நிறுத்தி வைக்கும் எண்ணத்துடன் எழுதியபோது சில தோழர்கள் உண்மை வரலாற்றை எழுதுவதில் தவறில்லை என்றனர் அதெயிடத்தில் ஒரு சி.பி.எம் தோழர் “சி.பி.எம் தோன்றுவதற்க்கு முன்னர் வரலாறு” என்கிறார், ஒரு சி.பி.அய் தோழர் என் மீது கோவப்பட்டு எழுதுகிறார். இவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக எனது எல்லா பதிவுகளையும் ஒன்றாக பதிவிடுகின்றேன் அதனுடன் காங்கிரஸ் கயவாளிகளுக்கு சளைதவர்கள் அல்ல இந்த வரலாற்று திரிப்புவாதிகள்.

தோழர்களே நான் whatchat groupல் சில நேரம் வாசிக்கும் போது பல தோழர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதுவதை கண்டு கோவப்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாதா நிலை அதனால் வரலாற்று அடிப்படையில் இதனை விளக்க நினைத்து இதனை எழுதுகிறேன்:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு தெரியாத தோழர்கள் கட்சி ஆவணங்களை வாசிக்கவும், ஆசிரியர் அருணன் மற்றும் பல ஆசிரியர்கள் எழுதியுள்ள பல பதிவுகளில் உள்ளன, வரலாற்று ஆவணங்களை வாசித்து தங்கள் ஆளுமையை சரிபடுத்தி கொள்ளவும் (இவை CPI, CPM தோழர்களுக்கு) (மா-லெ தோழர்கள் சுனிதி குமார் கோசின் நக்சல்பாரி முன்பும் பின்பும் சரியான வரலாற்று ஆவணம் ஆங்கிலேய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து மா-லெ இயக்கங்களின் இன்றைய நிலைவரை விளக்கியுள்ளார், பல செய்திகளை CPI மற்றும் CPM ஆவணங்கள் சுட்டிகாட்டாத நிகழ்வுகளை இதில் காணலாம்). 1952 முன் இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. குருச்சேவின் வழிகாட்டுதலில் மார்க்சிய லெனின்ய பாதையை கைவிட்டு அஜாய்கோஸ் அவர்களின் அறிக்கை குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்து சந்தர்ப்பவாத பாதையை தேர்ந்தெடுத்து வெல்லபட முடியாத தெலுங்கான புரட்சியை காட்டி கொடுத்தது. CPI மைய மற்றும் மாநில குழுவின் சார்ப்பாக அக்டோபர் 23, 1951ல் அன்று ஏ.கே கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்” தெழுங்கான போர் நேரு அரசை தூக்கி எறிய அல்ல கொடுங்கோன்மை நிலப்பிரபுத்துவக் எதிராக” என்று நேரு அரசின் முன் சரண் அடைந்தது, நேரு அரசின் 60 ஆயிரம் இராணுவத்தினர் செய்யமுடியாத செயலை இவர்களின் கடிதம் மண்டியிட வைத்தது. கடுமையான அடக்கு முறைக்கு ஆளான இ.க.க புரட்சி பாதையை விட்டு அமைதி வழி பாராளுமன்ற பாதையான திருத்தல்வாத பாதையை கடைபிடித்து மக்களுக்கு துரோகம் இழைத்தது.(1920 ல் உருவான இ.க.க சர்வதேச கம்யூனிச சித்தாந்தம் அடிப்படையில் இயங்கிய கட்சி இதனை விரிவாக காணலாம் பின்னர்).

1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்க்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் “ஜீன் 14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமை இயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு” என்ற  கடிதமும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்கு காரணமாயிற்று. இந்த ஆவணங்கள்தான் மாபெரும் விவாத ஆவணங்கள் என்றழைக்கபடுகின்றன.

1957ல் கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகண்ட இ.க.க. NDF, UDF என்ற உத்தியில் கங்கிரசின் பாணியில் பாராளுமன்ற பாதையை உயர்வானதாக தேர்ந்தெடுத்து கொண்டது. இதில் கங்கிரசுடன் கூட்டனி அமைப்பதா கூடாதா? என்ற கருத்து வேறுபாட்டில் உறுவானதே இ.க.க(மா) (1964 ல்), இரண்டு கட்சிகளும் புரட்சி பாதையை கைவிட்டு சீர்திருத்தவாதம், வர்க்க கூட்டு, ஆளூம் வர்க்கத்திடம் சரணாகதி இவைகளை முதண்மைபடுதி வந்துள்ளன.

CPI(M)  மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968 ல் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளி போட்டது, ஆனல் CPI போல் CPI(M) மும் அமைதிவழி மாற்றம், ஆயுதப் புரட்சி அல்ல! நிலத்திற்க்கான போராட்டம், அதிகாரத்திற்க்கான போராட்டம் அல்ல! என்ற நிலைப்பாட்டைதான் எடுத்தது. இத்தகைய நிலையில்தான் CPI(M) ன் திரிப்புவாத நிலைபாட்டை எதிர்த்தும் வர்க்க சமரசப் பாதையை எதிர்த்தும் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தனர்.
 CPI(ML) உருவாக்கம்
Cpi(m) கட்சிக்குள் போராடிய புரட்சியாளர்கள் நவீன திரிப்புவாதத்திற்கு எதிராகவும், அக்கட்சி வர்க்கப் போராட்டத்திற்க்கு இழைத்த துரோகத்திற்க்கு எதிராகவும் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டுவதற்க்குப் போராடினார்கள். அவ்வாறு போராடிய புரட்சியாளர்கள் பல குழுக்களாக இருந்து போராடினார்கள். புரட்சிகரப் போராட்டத்தை தொடரும் விதமாக 1967 தேர்தலைப் புறக்கணிக்குமாறு புரட்சியாளர்கள் அறைகூவல் விட்டனர், ஆனால் CPI(M) ஓடுகாலியான CPI யுடனும் பிற பிற்போக்கு முதலாளித்துவக் கட்சியுடனும் காங்கிரசை தோற்க்கடிப்பது என்று அய்க்கிய முன்னனி கட்டிவெற்றி பெற்ற கையோடு கிசான் சபாவின் (தன் அமைப்பான) கோரிக்கையான நில சீர்திருத்த கொள்கையைகூட நடைமுறைபடுத்த மறுத்துவிட்டன.

7வது காங்கிரசிற்க்கு பிறகு CPI(M) கட்சிக்குள்ளேயே இருந்த பொதுவுடைமைப் புரட்சியாளர்கள் CPI(M)  துரோகத்திற்க்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினர். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் மற்றும் பிற மிகவும் முக்கியமான மக்கள் பிரச்சினைகளை கைவிட்டன, பாராளுமன்ற பாதையை சட்டவாத அடிப்படையில் அனுகி கட்சியை சீரழிவு பாதையில் எடுத்து சென்றனர்,

Published on 30/06/2016
CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் நேற்றைய தொடர்ச்சி...
CPI மற்றும் CPI(M) யின் திருத்தல்வாதங்களை பற்றி பார்த்தோம். அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி நந்தா CPI(M) புரட்சிபாதையில் பயணித்து விட்டது ஆம் வன்முறைபாதையை தேர்ந்தெடுத்துவிட்டது என்று
கூரிய வார்த்தையை சரிகட்ட கட்சியின் பொதுசெயலர் சுந்தரய்யா நந்தாவை சந்திக்க டெல்லி அனுப்பிவைக்கப் பட்டார், CPI(M) தாங்கள் ஆயுதப் போராட்டம் எதுவும் சிந்தித்துகூடப் பார்க்கவில்லை என்றும்சட்டரீதியாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவதுடன்மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற முழக்கத்தை மட்டுமே வைத்திருப்பதாகவும் விளக்கி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களை மயக்குவதற்க்கு பேசப்பட்ட வீரவசனங்கள் புதுடெல்லியில் உள்ள எஜமானர்களின் முன்பு வெறும் முனகல்களாக மாறின !
கம்யூனிசம் என்பது
துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வும்
மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக
பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு,
ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்ட்தாய் இருக்கிறது.
பாவ புண்ணிய்க் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முட்ங்கி விடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடைகளைக் கண்டடைவதா?
அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்சியமே வேறில்லை- தோழர் பாரதிநாதனின் கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் அடிகோலில் இருந்து.
நாளை தொடர்வேன்.....
CPI, CPI(M) தோழர்கள் பதில் தெரிவிக்காமையால் நீண்ட பதிவிடாமல் சிறிதாகவே பதிவிட்டுள்ளேன். இத்தொடர் இந்திய மா-லெ இயக்க வரலாற்றுடன் தனித்து செயல்படும் குழுக்கள் அவை முன் வைக்கும் கோட்பாடுகள் எல்லாம் தெரிவிப்பேன். முயற்சிக்கிறேன் சரியான உண்மையான நிகழ்வுகளை பதிவிட தவறை சுட்டி காட்டலாம்... தோழமையுடன் தொடருவோம்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்: CPC 01/07/2016
தோழர்களே நான் இத்தொடரை இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறேன், சில தொழர்கள் நினைக்கலாம் தேவையற்றவையாக, ஆனால் இன்றைய பாசிச நிலையை முன் அறிந்த கம்யூனிஸ்ட்கள் செயலாற்றாமையே ஆம் அரசில் பங்கேற்று கொண்டே பாசிச வளர்ச்சிக்கு மறைமுகமாக பயன்பட்டுள்ளனர்.  (இதனை பின்னர் பார்க்கலாம்).
இரண்டாம் உலகப்போரால் மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை துக்கி எறிய இந்திய மக்களின் நிலைஎரிமலையின் விளிம்பில்எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. 150 போலிசு இராணுவ வாகனங்கள் தீக்கிறையாக்கபட்டன. துப்பாக்கி குண்டைகண்டு அஞ்சாமல் மக்கள் போரிட்டதை குறிப்பிட்டுள்ள வைசிராய் இனி இந்தியரை கட்டுபடுத்த முடியாது என்பதனை தெள்ளதெளிவாக எழுதியுள்ளார். பல நூறுபேர் கொல்லபட்டனர் 1 அமெரிக்கர் உட்பட 33 பேர் கொல்லபட்டதாகவும் 200 பொது மக்களும் 70 ஆங்கிலப் படைவீர்ர்களும் 37 அமெரிக்கப் படைவீர்ர்களும் படுகாயம்பட்ட தாகவும் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர் ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற்படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படைவீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.இராணுவப்படை வீரர்கள் சுடமறுத்து ஆங்கிலேய படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இன்று மதம் அரசாள்கிறது இந்த பாசிஸ்ட்கள் நினைவில் கொள்ளட்டும் அன்று போரட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை பிரிக்க இந்து முஸ்லீம் மதவாத சிந்தனை எடுபடவில்லை, வீரர்கள் தோலோடு தோல் கொடுத்து போரிட்டனர். மக்கள் தன்னிச்சையாக முன்வந்து வீரர்களுக்கு உதவினர், போராட்டத்தை ஓடுக்க கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்ற பின்தான் வீதிகள் ஆங்கிலேய படை கைவசமாயின- இங்கே ஒவ்வொரு கட்சியின் நிலைபாட்டையும் கணக்கில் கொளல் வேண்டும்.(1919 ல் ஜாலியன்வாலா பாக்கில் ஜெனரல் டைரின் வார்த்தையில் குண்டு தீர்ந்துவிட்டதால் சுடுவதை நிறுத்தினோம்) இங்கே வீதியில் உள்ள எல்லோரும் சுட்டு கொல்லபட்ட பின் சுடுவதை நிறுத்தினர். எந்த மதவாதத்திற்க்கும் மயங்காத கடல்படை வீரர்கள் சரண் அடைவதைவிட வீர மரணத்தை வரவேற்றனர்.
இவை விரிவான வரலாறு இதனை விவரிக்கும் முன்
தோழர் லெனின் செயல்தந்திரத்தின் வரையறையை பார்ப்போம்:-
செயல்தந்திரம் பற்றிய கேள்வியானது கட்சியின் அரசியல் நடத்தையைப் பற்றிய கேள்வியாகும். நடத்தை வழியானது கோட்பாடு, வரலாற்றுக் குறிப்புக்கள், அரசியல் சூழ்நிலை முழுவதையும் பகுப்பாய்வு செய்தல், இன்ன பிறவற்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். (லெ.நூ. தி. 9..26)
நிகழ்வுகளுக்குப் பின்னால் ஸ்தம்பித்து நிற்கின்ற, நிகழ்வுகள் தோன்றிய பிறகு அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்கிற செயல்தந்திர முழக்கங்களைக் கொள்வதன் மூலம், நாம் திருப்தி அடைந்து கொள்ளமுடியாது. நம்மை முன்நோக்கி அழைத்துச் செல்கிற, நமக்கு முன்னால் உள்ள பாதையை ஒளியூட்டிக் காட்டக் கூடிய, இயக்கத்தின் உடனடிக் கடமையில் இருந்து நம்மை மேலே உயர்த்துகிற செயல்தந்திர முழக்கங்களை நாம் கொண்டிருக்க வேண்டும்.
நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; அது செயலுக்கான வழிகாட்டி: என்று தோழர் எங்கெல்ஸ் தன்னையும் தன் புகழ்வாய்ந்த நண்பரையும் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
ஏனெனில் மார்க்சியம் என்பது உயிர்த்துடிப்புள்ள தத்துவமாகும். அதன் பல்வேறு வகையான பார்வைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
(
லெ.நூ..தி.17, பக் 39-41)
மார்க்சியம் நம்மைச் சரியான விதத்திலும், புறவயமாகவும் வர்க்க உறவுகளைப் பற்றியும், ஒவ்வொரு வரலாற்றுச் சூழலின் கறாரான, விஷேட குணாம்சங்களையும் சோதித்தறிய, பகுப்பாய்வு செய்யுமாறு கோருகிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாம், கொள்கைக்கு விஞ்ஞான அடிப்படையைக் கொடுக்கக் கூடிய மிகவும் முக்கியமான இந்தக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த எப்போதும் முயன்று இருக்கிறோம். “நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; ஒரு செயலுக்கான வழிகாட்டியாகும்என்று மார்க்சும், எங்கெல்சும் எப்போதும் கூறிவந்ததுடன்விதிகளை மனனம் செயவதும், அதைத் திரும்பத்திரும்பக் கூறுவதும் பொதுவான கடமைகளைப் பற்றிக் கூறுவதற்கே தகுதியுள்ளதுஎன்று சரியான விதத்தில் பரிகசித்துள்ளனர். தத்துவமானது வரலாற்று நிகழ்வின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளாதார அரசியல் நிபந்தனைகளுக் கேற்றாற் போன்று அவசியமானதாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.(லெனின், செயல்தந்திரம் பற்றிய கடிதங்கள், முதல் கடிதம்)
நாளை மற்றவை தொடருவேன்.....
Top of Form
Bottom of Form

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் (14/07/2016)

நான் இதனை தொடர்ந்து எழுதாமைக்கு காரணம் CPI,CPM தோழர்கள் எந்தவிதமான புரிதலுமின்றி தொடர்ந்து whatchat ல் தேவையற்ற முறையில் எழுதி கொண்டிருப்பதால் நானும் எழுத வேண்டியுள்ளது.

தனி நபர்வாதத்தால் சீர்குழைந்துள்ள பழைய வரலாற்றை திருப்பி பார்க்க தேவை ஒரு பக்கம் கட்சிக்காக தன்னை அர்பனித்த மக்களை மறந்து தலைமை அரசுடன் கள்ளகூட்டு அமைத்ததை என்னவென்று சொல்ல?
இதனை மறைத்து தலைமையின் சந்தர்பவாத சரணாகதியை என்னவென்று விளக்க முடியும்?

1941ல் பிரமோத் தாஸ் குப்தா CIA வின் உளவாளியாகவும் தன் கட்சிகாரனை காட்டி கொடுக்கும் ஆள்காட்டியாகவும் செயல்பட்டார். செப்டம்பர் 7,1967 அன்று உத்திர்ப்பிர்தேசத்தை சார்ந்த கட்சியின் மாநிலக்குழுவின் செயலறும் மைய குழு உறுப்பினருமான சிவக்குமார் மிஸ்ரா ..பி யின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்நக்சல்பாரியில் வெடித்துள்ள விவசாயிகள் புரட்சி திரிப்புவாதிகளிடமிருந்து மார்க்க்சிய- லெனினியவாதிகளை வேறுபடுத்துகின்ற எல்லைக் கோடாக மாறியுள்ளதுஎன்று திரிப்புவாதிகளை ஆம் மக்கள் விரோத முதலாளிகளின் கைபாவை மாறி கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகளை திரைகிழித்தார்.
1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தோ-சீன போர் கம்யூனிஸ்ட்டுகளை தேச பக்தி நிருபிக்க படவேண்டுயிருந்தது, இதனை நேருவிய கம்யூனிஸ்ட்டுகள் என்பர். (இதனை தங்களின் கட்சி ஆவணங்களில் சரியான முறையில் பதியவில்லை என்பேன்)

நாளை தொடர்வோம் இன்னும் சில...... சி.பி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15/07/2016

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.
மார்க்ச்சியத்தைவிட்டு தலைமை ஓடுகாலியானவற்றை முன் நிருத்தி நான் எழுதுகிறேன். இன்றளவும் அடிமட்ட தோழர்கள் கட்சிக்கு உண்மையுடன் உழைக்கின்றனர் ஆனால் இவை வீணாகி போவதைதான் நான் சுட்டிகாட்ட நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு முதுபெரும் தோழரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து, அவரிடம் விவாதிக்கும் போது தனது இளமை கால களபணி குறித்தும் பின்னர் தலைமையின் அராஜகவாத போக்கையும் மக்கள் மத்தியில் தனிமைபட்டுள்ள நிலைமை பற்றியும் பேசினார், பின்னர் நான் கேட்டேன் தளி ராமசந்திரன் போன்ற கிரைனட் மாப்பியா, குண்டர்படை தலைவன் கம்யூனிஸ்டா? ஏன் இவனின் தேவை கட்சிக்கா அல்லது அவனுக்கா? அவனை கட்சி மேலிடம் உயர்த்தி பிடித்துள்ளது ஏன்? என்றேன்?
அவரிடம் சரியான முறையில் விளக்கம் கொடுக்க முடியாமல் போகவே அதனை தவிற்த்தேன்!
மேஜர் ஜெய்பால் சிங்கின் “நாடு அழைக்கிறது” படித்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதில் அவர் நேருக்கு எழுதிய கடிதம் வெளியிட்டிருப்பார்கள் நேருவின் உண்மை முகத்தை அவர் கிழித்திப்பார் ஆனால் தலைமையோ அதே நேருவிடம்.... நட்பா அல்லது ....
1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை. அந்த நேருவை CPI,CPM கொண்டாடிய முறைமைகளுக்கு காரணம் தெரிவிக்குமா? (அவர் இறந்த பின்னர் அவரை கொண்டாடியதை குறிப்பிடுகிறேன்).
 நாளை வேறொரு செய்தியுடன் தொடர்வேன் சி.பி
நான் பதிவை இதனுடன் நிறுத்தியிருந்தேன். இனி தொடர உத்தேசித்துள்ளேன்.
இதனை தொடர சில காரணம் உள்ளன தோழர்களே!!!! எனது சில கேள்விகள் உங்கள் முன்,
1, 1947 ஆட்சி மாற்றம் யாருக்கானது இதை நாட்டின் சுதந்திரம் என்பதா?
2. இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளா? தேசிய முதலாளிகளா?
3.இந்திய அரசு காலனிய, அரை காலனிய நிலைபாடுடையதா?
4.இந்திய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் எதிர்பாளர்களா? இன்னும் தொடரும் இதன் பதிலில்தான் உண்மையான மார்க்சியா அறிவுள்ளது!!!!.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
21/07/2016 CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.
இன்றைய நிலையில் CPI,CPM பல தொழிற் சங்கம், மாணவர் அமைப்பு, பல மட்ட அளவில் பொதுமக்கள் தொடர்ப்பு இருந்தாலும் மார்க்சிய கொள்கையை கைவிட்டு கம்யூனிச திரிப்புவாதிகளாக உள்ளவற்றை திரை கிழிக்கபடுதல் அவசியமானதாக உள்ளது.
நான் வராலற்று நிலையில் இருந்து மட்டுமே விமர்சிக்க நினைத்திருந்தேன் ஆனால் ஏகாதியபத்தியம் கம்யூனிச எதிர்பை சமாளிக்க தொண்டு நிறுவனங்களையும் மக்களை பிளவுபடுத்தும் வேலை நடைபெருவதுபோல் இ.க.க மற்றும் இ.க.க(மா) மக்கள் திரளை பிரச்சினைகளை அனுகாமல் பொருளாதார போராட்டங்களாகவும் சில சரணாகதி போராட்டங்களும் மக்கள் மத்தியில் கம்யுனிச செல்வாக்கை துடைத்தெறியவே செய்கின்றன. ஆகையால் இவர்களின் கொள்கையை விமர்சிக்க வேண்டிய சூல்நிலை.
நான் பொதுவாக சில கேள்விகளை மேலே எழுப்பி உள்ளேன் அவற்றை மார்க்சிய வழியில் அணுகும்திறன் கொண்டவர்களே ...தேவை படும் பொழுது இன்னும் வரும்...
அடிக்கடி அரசு தலைவர்களுக்கு புகழ் அஞ்சலி அல்லது காந்தி நேருவை தூக்கிபிடிக்கும் வேலை என்னவென்று சொல்ல.... வர்க்கம் அறிந்துதான் செய்கின்றனரா?
இந்த அரசு இந்த நடைமுறை யாருக்கானது? கல்வி கடன்கட்ட முடியவில்லை மாணவன் தற்கொலை பல லட்சம் கோடி கடன் கட்டதா முதலாளி வசூலிக்கும் கொடுமை, மாணவன் தற்கொலையை எப்படி விளக்குவது?
நாளை வேறொரு செய்தியுடன் தொடர்வேன் சி.பி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மஜஇக வுக்கான ISI தரச்சான்றை அளிக்கும் முகவராக தோழர் சுபராஜன் என்பவர் உரிமம் பெற்றுள்ளாராம்!
சுபராஜன் அவர்களே!
யார் மஜஇக ?என்பதற்கான தரச்சான்று அளிக்கும் உரிமையை உங்களுக்கு வழங்கியவர் யார்?
நீங்கள் மஜஇக என்பதற்கான உரிமத்தை பெற்றுள்ளீர்களா?அதை உங்களுக்கு வழங்கியவர் யார்?
உங்களுக்கு ஒத்து ஊதுபவர்கள் மட்டுமே மஜஇக என்ற கோட்பாட்டை முன்னிறுத்துகிறீர்களா?
தரச்சான்று அளிக்கும் தாங்கள் இதற்கான பதிலை பதிவிடவும்.
1)மஜஇக வுக்கான கொள்கை அறிக்கையை தாங்கள் பார்த்ததாே படித்ததாே உண்டா?
2)மஜஇக வுக்கான கொள்கை அறிக்கையை உங்களால் முகநூலில் பதிவிட முடியுமா?
3)மஜஇக அமைப்புக்கான அமைப்பு விதிகளை நீங்கள் பார்த்ததாே படித்ததாே உண்டா?
4)மஜஇக வுக்கான அமைப்பு விதிகளை உங்களால் முகநூலில் பதிவிட முடியுமா?
5)மக்களுக்கான ஜனநாயகம் இருக்கட்டும்
முதலில் மஜஇக வில் ஜனநாயகம் உண்டா?
6)கடந்த 25 ஆண்டுகளாக மஜஇக வுக்கான கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு அறிக்கையை உருவாக்கவாே வெளியிடவாே செய்யாதது ஏன்?
7)மஜஇக உறுப்பினர் தகுதி எது என்பதை உங்களால் பதிவிட முடியுமா?
8)மஜஇக வில் ஒருவரை நீக்கவும் சேர்க்கவுமான விதிமுறைகள் என்ன?அவற்றை முகநூலில் வெளியிட முடியுமா?
9)மஜஇக வுக்கான மாநில செயலாளர் யார்?அவர் எந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்?
10)மஜஇக வெளிப்படையான இயக்கமா?இரகசிய இயக்கமா?
11)பால் தாக்கரேவின் சிவசேனாவை போல் நானே தலைவன்,நானே மந்திரி என்பதா?
12) 25 ஆண்டாக ஒரு மாநாடாே, அமைப்பு தேர்தலாே நடந்த வரலாறு உண்டா?அப்படி எதுவுமில்லாத ஒரு அமைப்பை ஜனநாயக இயக்கம் என்பது எவ்வாறு?
13)மஜஇக வில் மதியழகனை நீக்கியதாக ஒரு துண்டு காகிதத்தையாவது உங்களால் பதிவிட முடியுமா?
14)மஜஇக வில் இதுவரை நீக்கப்பட்டாேர் பட்டியலை உங்களால் வெளியிட முடியுமா?
15)மஜஇக வில் சேர்க்கப்பட்டாேர் பட்டியலையாவது வெளியிட முடியுமா?
16)சேர்க்கப்பட்டாேரும் தெரியாது விலக்கப்பட்டாேரும் தெரியாது
இந்த லட்ச்சனத்தில் போலி !அசல்! என்ற முத்திரையை விற்க முன்வந்துள்ளீர்!!
https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xaf1/v/t1.0-1/p50x50/13516594_302181103450996_987179356963768564_n.jpg?oh=2871899c0f339d82f407ac5b67fcf7d9&oe=5834C9A9&__gda__=1479517155_6fbff01cdbd3054f4fbb2611f2b68bc4

Chengathir Cp shared Satheesh Kumar's photo.
Satheesh Kumar's photo.

https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-xaf1/v/t1.0-1/p50x50/13516594_302181103450996_987179356963768564_n.jpg?oh=2871899c0f339d82f407ac5b67fcf7d9&oe=5834C9A9&__gda__=1479517155_6fbff01cdbd3054f4fbb2611f2b68bc4

Chengathir Cp shared தாய்க்காக ஒரு நிமிடம்'s photo.
தாய்க்காக ஒரு நிமிடம்'s photo.

No comments:

Post a Comment