Thursday 25 August 2016

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்



22/07/2016

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
ஜாக்மதி ஜேங்குவ்ன் ( Jagmati Sangwan) என்ற சிபிஐ எம் மத்திய கமிட்டி உறுப்பினர் அக்கட்சியின் கலகக்காரர் என்று இப்போது அறியப்படுகிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்பு அவர் மத்திய கமிட்டி உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். அவரை அக்கட்சி நீக்கம் செய்துள்ளது. காங்கிரசுடன் கூட்ட இல்லையா இதே நிலைபாட்டிலிருந்துதான் CPI(M) CPI யிலிருந்து விலகியது 1964 க்கு பிறகு சில மாநில சட்ட மன்றத்தை கைபற்றிய இந்த போலிகள் செய்தது என்ன? தளி ராம சந்திரன் போன்ற மாப்பியாவை வளர்த்து சாதனை புரிந்தது மட்டுமே!!!! இதேபோல் ஜாக்மதியும் எதிர்க்கும் காங்கிர்சுடன் கூட்டு தவறு எங்கிறிந்து கூறுவாரா? 
இவரை போன்றே இ.க.க லிருந்து விலகி புரச்சிக்குவித்திட்ட ஒரு தோழரின் வார்த்தையை இங்கே பதிவு செய்கிறேன் நாளை அதாவது திங்கள் தொடருவோம் மற்றவையை........சி.பி (22/07/2016)

நாம் இந்த சட்டமன்றத்திற்க்கு வரும்போது சிலர் பட்டினிப் போராட்டத்தை நடத்துவதையும், சம்பள உயர்வு கோரி மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது, இவர்களுக்காண தீர்வு தடியடி அல்லது கைது நம்மிடம் திட்டமோ தீர்வோயில்லை. இத்தனை ஆண்டுகளில் அரசானது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நடுத்தர மக்களிடையே நம்பிக்கையையும் அமைதியையும் நிலை நாட்ட முடிந்ததா? மக்களின் மீதான நெருக்கடி தீவிரம் அடைந்து கொண்டேயுள்ளது. இதனை அறிய மாநில மத்தி அரசின் செயல் திட்டங்கள் பற்றிபார்ப்போம்; மாநிலத்தின் பொருளாதாரம் மாநில அரசிடமில்லை அப்படியெனில் மத்தியரசிடம் உள்ளதா என்றால் அங்கேயுமில்லை அப்படியெனில் யாரிடம் உள்ளது தோழர்களே? இதனை தன் சட்டமன்ற நடவடிக்கையில் பேசிய தோழர் தனது சேவை மக்களுக்கானது அல்ல ஆகவே இந்த பாராளுமன்ற பாதையை புறக்கணிக்கிறேன் என்று புரட்சிக்கான பாதையை தேர்ந்தெடுத்தார்..... இதனை விரிவாக எழுதுவேன் வரும் நாட்களில்....
தற்பொழுது ஜாக்மதியின் எதிர்ப்பு பற்றிபார்ப்போம்:-
Marxist Leninist Articles and Publications's photo.

CPI M கட்சிக்குள் எழுப்பப்படும் கேள்விகள்
====================================
https://www.facebook.com/jagmati.sangwan?fref=ts
ஜாக்மதி ஜேங்குவ்ன் ( Jagmati Sangwan) என்ற சிபிஐ எம் மத்திய கமிட்டி உறுப்பினர் அக்கட்சியின் கலகக்காரர் என்று இப்போது அறியப்படுகிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்பு அவர் மத்திய கமிட்டி உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். அவரை அக்கட்சி நீக்கம் செய்துள்ளது.
அவர் அளித்துள்ள செய்தியில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மேற்கொண்டபுரிதல்' கட்சி வழிக்குப் புறம்பானது என்று அவர் சொல்லியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்க சிபிஐ எம் கட்சி ஒட்டுமொத்த கட்சியையும் பிளாக் மெயில் செய்து “'மென்மையான' பாதையை மேற்கொள்ளும்படி கட்சியை நிர்ப்பந்தம் செய்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜக்மதி ஹரியானா சிபிஐ எம் கட்சியின் தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாமல், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர்.
அவரின் விலகலும் அதனைத் தொடர்ந்து அவர் நீக்கம் செய்யப்பட்டதும் அக்கட்சிக்குள் நிலவும் குழப்பமான நிலையைப் பிரதிபலிப்பதாக பத்திரிகைகள் எழுதின.
இரண்டு வழிகள் முட்டிக்கொள்வதாக தெரிகிறது. விசாசகப்பட்டினம் காங்கிரஸ் படி பார்த்தால் காங்கிரசுடன் கொண்ட (மேற்கு வங்க) சரிகட்டுதல் தவறானது என்பது ஒன்று. அது கட்சி வழியுடன் இசைந்ததாக இல்லை என்ற கருத்து அரசியல் தலைமைக் குழுவின் சிறுபான்மையாக இருக்க, அது கட்சி வழியை மீறியதாகும் என்ற கருத்து அக்குழுவின் பெரும்பான்மையாக இருந்தது என்று ஜக்மதி சொல்லியுள்ளார்.
அரசியல் தலைமைக் குழுவின் சிறுபான்மை கருத்தை சிபிஐ எம் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் யெச்சூரி மத்திய கமிட்டியில் முன் வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ள்ளார். மத்திய கமிட்டி கூட்டத்தில் சுற்றுக்கு விடப்பட்ட பெரும்பான்மை கருத்து மேற்கு வங்க தேர்தல் முடிவு கட்சி வழிக்கு புறம்பானது என்று சொன்னதாக ஜக்மதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கமிட்டி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் , மேற்கு வங்க தேர்தல் முடிவு கட்சிக்கு வழிக்குப் புறம்பானது என்றும், அது கட்சியின் வளர்ச்சியைத் தமது மாநிலங்களில் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்றும் ஜக்மதி சொன்னார்.
மேற்கு வங்க தேர்தல் தந்திரத்திற்கு எதிரான போக்கை அக்கட்சியின் மேற்கு வங்க பிரிவினர் அனுமதிக்கவில்லை ‘‘அச்சுறுத்தல்செய்தனர் என்றும் அவர் சொல்லியுள்ளார்.
மத்திய கமிட்டி கூட்டத்தின் இறுதியில், பெரும்பன்மை அரசியல் தலைமை குழு கருத்தில் இருந்தவழி விலகல்என்ற கருத்துக்குப் பதிலாக, ‘ஒத்துப்போகவில்லை என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.
காங்கிரசுடன் மேற்கொண்டபுரிதல் கட்சி வழியிலிருந்து விலகுவது பற்றிய மிக மோசமான உதாரணம் என்றும், அதன் காரணமாகத்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை தம் கட்சி தழுவியது என்றும், முதலாளித்து கட்சிகளுடன் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்ப வாதக் கூட்டணியை மக்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறார்கள் என்றும் ஜக்மதி கடுமையாக விமர்சித்துள்ளார். அக்கட்சிமேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கொண்ட தேர்தல் உறவை ஆதரித்தும் மத்திய கமிட்டியின் நிலைக்கு எதிராகவும் மாநிலத் தலைவர்கள் பலர் பேசுவது அவர்கள் மக்களின் விருப்பத்திருந்து தனிமைப் பட்டிருப்பதைக் காட்டுகிறது“, என்றும் அவர் சொன்னார்.
கட்சியிலிருந்து தான் விலகியதற்கான காரணம் கருத்தியல் பிரச்சனைதான் என்று சொன்ன அவர்கட்சியின் நலனையும் மக்களை நலனையும் பாதிக்கும் வழியைப் பின்பற்ற எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை”, என்று சொன்னார்.
Comments
Ameeth K A
Ameeth K A காங்கிரசுடன் சி.பி.எம் கூட்டு சரியானது எனும் கட்சியின் சிறுபான்மை கருத்தை ஏற்காவிட்டால் விலகி விடுவோம் என்று மே.வங்க மூத்த தலைவர் பிமன் போஸ், மாநில செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
http://m.timesofindia.com/.../articleshow/52859541.cms

No comments:

Post a Comment