Thursday 25 August 2016

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்



CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்  25/07/2016

நான் நேற்றைய பதிவில் தலைப்பு மாற்றியிருந்தேன் ஆனால் இவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்தான் என்பதனை பல நிக்ழ்வுகள் நிருபிக்கின்றன அதனால் இதே தலைப்பில் தொடரும் எண்ணத்தில் உள்ளேன் தோழர்களே கருத்துகளை தெரிவிக்கவேண்டும் அப்போதுதான் உண்மையான தேவையான இலச்சியத்தை அடைய முடியும் இனி இரு வேறு நிகழ்வுகள் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏன் என்பதனை அறுவிக்க கீழே:-
போலி கம்யூனிஸ்டு AITUC சங்கம் தொழிலாளர்களுக்காக போராடுவதைப்போல நடித்து, முதலாளிகளுக்கு சேவை செய்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைப்பதை பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு அதையும் தாண்டிஎகிறிக்குதித்துமுன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளிஎன்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.- வினவு, August 26, 2014
சும்மாவா! ராம்கோ முதலாளி கட்சியின் முக்கியப் புரவலராயிற்றே! கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுக்கட்டாக பணமும் கொடுத்தவரல்லவா முதலாளி! அவ்வளவு ஏன்? கட்சியின் மாநிலக்குழு கூட்டமே ராம்கோ முதலாளி நடத்தும் பள்ளியில் தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவ்வளவு நெருக்கம்! தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணத்தில் முதலாளியிடம் விருந்து சாப்பிடுகிறார்கள். சி.பி. யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.
பி.எம்.ராமசாமி
இந்த எடுபிடிகள் பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் என்ன கூறியுள்ளனர்?
எவ்வித சட்ட உரிமையும், பாதுகாப்பும் இல்லாத தொழிற்சாலைகளிலெல்லாம் இவர்களது தொழிற்சங்கம் போராடி வருகிறதாம்! ஆனால், ராம்கோவில் அப்படி இல்லையாம்!
உண்மையில் இந்த எடுபிடிகளை தொழிலாளர்கள் குப்பையாக ஒதுக்கித் தள்ளி விட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதால் குமுறிக் கொண்டிருந்த இராஜபாளையம் மில்ஸ் சி யூனிட் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் செய்து சம்பள உயர்வைப் பெற்றனர். சி யூனிட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தின் வீரியத்தை மட்டுப்படுத்த வந்த எடுபிடி சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணித்து விரட்டியதை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த லட்சணத்தில் சட்டத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ராம்கோ முதலாளி என்கிறார்கள் இந்த எடுபிடிகள். (நன்றி வினவு, August 26, 2014)
தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொந்த பணத்தில் நிலம் வாங்கி அதனை குறைந்த விலையில் தொழிலாளிகளுக்கு கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது, பள்ளி, கல்லூரிகளை உருவாக்கியது என்று கோயபல்சுகளே வெட்கப்படும் அளவுக்கு இந்த போலி கம்யூனிச எடுபிடி தொழிற்சங்கங்கள் முதலாளிக்கு கூஜா தூக்கியிருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?
ராம்கோ பிரசுரம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராம்கோ முதலாளி பிறந்தநாள் கொண்டாங்களை எதிர்த்து தன்னிச்சையாக தொழிலாளர்கள் ஒட்டிய சுவரொட்டி
முதலாளி பி..சி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்த ஆலை நிர்வாகமா தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளும், தொழிலாளர்களுக்காக வீடும் கொடுக்கப்போகிறது? கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களும், குளங்களும் ராம்கோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், இதற்காக யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும் அவர்களுக்கு கார் பரிசளிப்பதும் வாடிக்கை என்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, இராஜபாளையம் மக்களே பேசுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட நிலங்களைத்தான் செண்டுக்கு ரூ 4,000 எனும் விலையில் தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்தது ஆலை நிர்வாகம்.
போலி கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க அழைத்து விட்டு அதை மனித முகம் கொண்ட முன்னேற்றம் என்கிறார்கள். இவர்களோ ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரனை வள்ளல் என்கிறார்கள். வேண்டுமானால் இந்த எடுபிடிகள் இன்னொரு நோட்டீஸ் போட்டு அதில் என்ன செலவில் எவ்வளவு நிலம் பெறப்பட்டது? எத்தனை தொழிலாளிக்கு நிலம் கொடுத்தார்கள்? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடட்டும்.
தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராம்கோ முதலாளி. இந்த மண்டபத்தில் எந்த தொழிலாளியின் சுபநிகழ்ச்சிக்காவது இலவசமாகக் கூட வேண்டாம் குறைந்த வாடகையிலாவது கொடுத்ததிருக்கிறார்களா? ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தொழிலாளியின் வீட்டு வைபவம் என்றால் முன்னுரிமை கொடுப்பார்களாம். என்ன பித்தலாட்டம் இது! ஆனால் தற்சமயம் முன்னுரிமை கூட கொடுப்பதில்லை என்பது தான் உண்மை
===========நன்றி வினவு, August 26, 2014+++++++

No comments:

Post a Comment