Thursday 25 August 2016

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்



CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் (14/07/2016)

நான் இதனை தொடர்ந்து எழுதாமைக்கு காரணம் CPI,CPM தோழர்கள் எந்தவிதமான புரிதலுமின்றி தொடர்ந்து whatchat ல் தேவையற்ற முறையில் எழுதி கொண்டிருப்பதால் நானும் எழுத வேண்டியுள்ளது.

தனி நபர்வாதத்தால் சீர்குழைந்துள்ள பழைய வரலாற்றை திருப்பி பார்க்க தேவை ஒரு பக்கம் கட்சிக்காக தன்னை அர்பனித்த மக்களை மறந்து தலைமை அரசுடன் கள்ளகூட்டு அமைத்ததை என்னவென்று சொல்ல?
இதனை மறைத்து தலைமையின் சந்தர்பவாத சரணாகதியை என்னவென்று விளக்க முடியும்?

1941ல் பிரமோத் தாஸ் குப்தா CIA வின் உளவாளியாகவும் தன் கட்சிகாரனை காட்டி கொடுக்கும் ஆள்காட்டியாகவும் செயல்பட்டார். செப்டம்பர் 7,1967 அன்று உத்திர்ப்பிர்தேசத்தை சார்ந்த கட்சியின் மாநிலக்குழுவின் செயலறும் மைய குழு உறுப்பினருமான சிவக்குமார் மிஸ்ரா ..பி யின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்நக்சல்பாரியில் வெடித்துள்ள விவசாயிகள் புரட்சி திரிப்புவாதிகளிடமிருந்து மார்க்க்சிய- லெனினியவாதிகளை வேறுபடுத்துகின்ற எல்லைக் கோடாக மாறியுள்ளதுஎன்று திரிப்புவாதிகளை ஆம் மக்கள் விரோத முதலாளிகளின் கைபாவை மாறி கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகளை திரைகிழித்தார்.
1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தோ-சீன போர் கம்யூனிஸ்ட்டுகளை தேச பக்தி நிருபிக்க படவேண்டுயிருந்தது, இதனை நேருவிய கம்யூனிஸ்ட்டுகள் என்பர். (இதனை தங்களின் கட்சி ஆவணங்களில் சரியான முறையில் பதியவில்லை என்பேன்)

நாளை தொடர்வோம் இன்னும் சில...... சி.பி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15/07/2016

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.
மார்க்ச்சியத்தைவிட்டு தலைமை ஓடுகாலியானவற்றை முன் நிருத்தி நான் எழுதுகிறேன். இன்றளவும் அடிமட்ட தோழர்கள் கட்சிக்கு உண்மையுடன் உழைக்கின்றனர் ஆனால் இவை வீணாகி போவதைதான் நான் சுட்டிகாட்ட நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு முதுபெரும் தோழரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து, அவரிடம் விவாதிக்கும் போது தனது இளமை கால களபணி குறித்தும் பின்னர் தலைமையின் அராஜகவாத போக்கையும் மக்கள் மத்தியில் தனிமைபட்டுள்ள நிலைமை பற்றியும் பேசினார், பின்னர் நான் கேட்டேன் தளி ராமசந்திரன் போன்ற கிரைனட் மாப்பியா, குண்டர்படை தலைவன் கம்யூனிஸ்டா? ஏன் இவனின் தேவை கட்சிக்கா அல்லது அவனுக்கா? அவனை கட்சி மேலிடம் உயர்த்தி பிடித்துள்ளது ஏன்? என்றேன்?
அவரிடம் சரியான முறையில் விளக்கம் கொடுக்க முடியாமல் போகவே அதனை தவிற்த்தேன்!
மேஜர் ஜெய்பால் சிங்கின் “நாடு அழைக்கிறது” படித்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதில் அவர் நேருக்கு எழுதிய கடிதம் வெளியிட்டிருப்பார்கள் நேருவின் உண்மை முகத்தை அவர் கிழித்திப்பார் ஆனால் தலைமையோ அதே நேருவிடம்.... நட்பா அல்லது ....
1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை. அந்த நேருவை CPI,CPM கொண்டாடிய முறைமைகளுக்கு காரணம் தெரிவிக்குமா? (அவர் இறந்த பின்னர் அவரை கொண்டாடியதை குறிப்பிடுகிறேன்).
 நாளை வேறொரு செய்தியுடன் தொடர்வேன் சி.பி
நான் பதிவை இதனுடன் நிறுத்தியிருந்தேன். இனி தொடர உத்தேசித்துள்ளேன்.
இதனை தொடர சில காரணம் உள்ளன தோழர்களே!!!! எனது சில கேள்விகள் உங்கள் முன்,
1, 1947 ஆட்சி மாற்றம் யாருக்கானது இதை நாட்டின் சுதந்திரம் என்பதா?
2. இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளா? தேசிய முதலாளிகளா?
3.இந்திய அரசு காலனிய, அரை காலனிய நிலைபாடுடையதா?
4.இந்திய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் எதிர்பாளர்களா? இன்னும் தொடரும் இதன் பதிலில்தான் உண்மையான மார்க்சியா அறிவுள்ளது!!!!.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
21/07/2016 CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.
இன்றைய நிலையில் CPI,CPM பல தொழிற் சங்கம், மாணவர் அமைப்பு, பல மட்ட அளவில் பொதுமக்கள் தொடர்ப்பு இருந்தாலும் மார்க்சிய கொள்கையை கைவிட்டு கம்யூனிச திரிப்புவாதிகளாக உள்ளவற்றை திரை கிழிக்கபடுதல் அவசியமானதாக உள்ளது.
நான் வராலற்று நிலையில் இருந்து மட்டுமே விமர்சிக்க நினைத்திருந்தேன் ஆனால் ஏகாதியபத்தியம் கம்யூனிச எதிர்பை சமாளிக்க தொண்டு நிறுவனங்களையும் மக்களை பிளவுபடுத்தும் வேலை நடைபெருவதுபோல் இ.க.க மற்றும் இ.க.க(மா) மக்கள் திரளை பிரச்சினைகளை அனுகாமல் பொருளாதார போராட்டங்களாகவும் சில சரணாகதி போராட்டங்களும் மக்கள் மத்தியில் கம்யுனிச செல்வாக்கை துடைத்தெறியவே செய்கின்றன. ஆகையால் இவர்களின் கொள்கையை விமர்சிக்க வேண்டிய சூல்நிலை.
நான் பொதுவாக சில கேள்விகளை மேலே எழுப்பி உள்ளேன் அவற்றை மார்க்சிய வழியில் அணுகும்திறன் கொண்டவர்களே ...தேவை படும் பொழுது இன்னும் வரும்...
அடிக்கடி அரசு தலைவர்களுக்கு புகழ் அஞ்சலி அல்லது காந்தி நேருவை தூக்கிபிடிக்கும் வேலை என்னவென்று சொல்ல.... வர்க்கம் அறிந்துதான் செய்கின்றனரா?
இந்த அரசு இந்த நடைமுறை யாருக்கானது? கல்வி கடன்கட்ட முடியவில்லை மாணவன் தற்கொலை பல லட்சம் கோடி கடன் கட்டதா முதலாளி வசூலிக்கும் கொடுமை, மாணவன் தற்கொலையை எப்படி விளக்குவது?
நாளை வேறொரு செய்தியுடன் தொடர்வேன் சி.பி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment