Thursday 25 August 2016

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்



தோழர்களே 1967 க்கு பின CPI மற்றும் CPI(M) தத்துவார்த்த நடைமுறையை எதிர்த்து பல தோழர்கள் நக்சல்பாரி இயகக்ங்களில் செல்வதும் அதெநேரத்தில் கட்சிக்குள் இருந்து கட்சியின் நிலைபாட்டை விமர்சிப்பவர்களை தமிழகத்தில் ரவுடி தேவரத்தின் கூலிபடையிடம் காட்டி கொடுத்து பல கொடுமைக்கு உட்படித்திய வரலாறு உண்டு.
இப்படி தன் இயக்கத்தை தத்துவார்த்த ரீதியாக கட்டிகாக்க முடியாத பாராளுமன்ற பாதம் தாங்கிகளான போலிகள், பதவி போதையில் மக்களை மறந்ததுடன் மார்க்சியத்தையும் திரித்து முதலாளித்துவ பாணியில் வளர்ந்து கொண்டுள்ளனர்.... தொடர்வோம் நட்புடன் தோழர்களே.....சி.பி

CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
தோழர்களே நான் இந்த பதிவை நிறுத்தி வைக்கும் எண்ணத்துடன் எழுதியபோது சில தோழர்கள் உண்மை வரலாற்றை எழுதுவதில் தவறில்லை என்றனர் அதெயிடத்தில் ஒரு சி.பி.எம் தோழர் “சி.பி.எம் தோன்றுவதற்க்கு முன்னர் வரலாறு” என்கிறார், ஒரு சி.பி.அய் தோழர் என் மீது கோவப்பட்டு எழுதுகிறார். இவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக எனது எல்லா பதிவுகளையும் ஒன்றாக பதிவிடுகின்றேன் அதனுடன் காங்கிரஸ் கயவாளிகளுக்கு சளைதவர்கள் அல்ல இந்த வரலாற்று திரிப்புவாதிகள்.

தோழர்களே நான் whatchat groupல் சில நேரம் வாசிக்கும் போது பல தோழர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதுவதை கண்டு கோவப்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாதா நிலை அதனால் வரலாற்று அடிப்படையில் இதனை விளக்க நினைத்து இதனை எழுதுகிறேன்:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு தெரியாத தோழர்கள் கட்சி ஆவணங்களை வாசிக்கவும், ஆசிரியர் அருணன் மற்றும் பல ஆசிரியர்கள் எழுதியுள்ள பல பதிவுகளில் உள்ளன, வரலாற்று ஆவணங்களை வாசித்து தங்கள் ஆளுமையை சரிபடுத்தி கொள்ளவும் (இவை CPI, CPM தோழர்களுக்கு) (மா-லெ தோழர்கள் சுனிதி குமார் கோசின் நக்சல்பாரி முன்பும் பின்பும் சரியான வரலாற்று ஆவணம் ஆங்கிலேய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து மா-லெ இயக்கங்களின் இன்றைய நிலைவரை விளக்கியுள்ளார், பல செய்திகளை CPI மற்றும் CPM ஆவணங்கள் சுட்டிகாட்டாத நிகழ்வுகளை இதில் காணலாம்). 1952 முன் இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. குருச்சேவின் வழிகாட்டுதலில் மார்க்சிய லெனின்ய பாதையை கைவிட்டு அஜாய்கோஸ் அவர்களின் அறிக்கை குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்து சந்தர்ப்பவாத பாதையை தேர்ந்தெடுத்து வெல்லபட முடியாத தெலுங்கான புரட்சியை காட்டி கொடுத்தது. CPI மைய மற்றும் மாநில குழுவின் சார்ப்பாக அக்டோபர் 23, 1951ல் அன்று ஏ.கே கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்” தெழுங்கான போர் நேரு அரசை தூக்கி எறிய அல்ல கொடுங்கோன்மை நிலப்பிரபுத்துவக் எதிராக” என்று நேரு அரசின் முன் சரண் அடைந்தது, நேரு அரசின் 60 ஆயிரம் இராணுவத்தினர் செய்யமுடியாத செயலை இவர்களின் கடிதம் மண்டியிட வைத்தது. கடுமையான அடக்கு முறைக்கு ஆளான இ.க.க புரட்சி பாதையை விட்டு அமைதி வழி பாராளுமன்ற பாதையான திருத்தல்வாத பாதையை கடைபிடித்து மக்களுக்கு துரோகம் இழைத்தது.(1920 ல் உருவான இ.க.க சர்வதேச கம்யூனிச சித்தாந்தம் அடிப்படையில் இயங்கிய கட்சி இதனை விரிவாக காணலாம் பின்னர்).

1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்க்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் “ஜீன் 14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமை இயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு” என்ற  கடிதமும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்கு காரணமாயிற்று. இந்த ஆவணங்கள்தான் மாபெரும் விவாத ஆவணங்கள் என்றழைக்கபடுகின்றன.

1957ல் கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகண்ட இ.க.க. NDF, UDF என்ற உத்தியில் கங்கிரசின் பாணியில் பாராளுமன்ற பாதையை உயர்வானதாக தேர்ந்தெடுத்து கொண்டது. இதில் கங்கிரசுடன் கூட்டனி அமைப்பதா கூடாதா? என்ற கருத்து வேறுபாட்டில் உறுவானதே இ.க.க(மா) (1964 ல்), இரண்டு கட்சிகளும் புரட்சி பாதையை கைவிட்டு சீர்திருத்தவாதம், வர்க்க கூட்டு, ஆளூம் வர்க்கத்திடம் சரணாகதி இவைகளை முதண்மைபடுதி வந்துள்ளன.

CPI(M)  மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968 ல் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளி போட்டது, ஆனல் CPI போல் CPI(M) மும் அமைதிவழி மாற்றம், ஆயுதப் புரட்சி அல்ல! நிலத்திற்க்கான போராட்டம், அதிகாரத்திற்க்கான போராட்டம் அல்ல! என்ற நிலைப்பாட்டைதான் எடுத்தது. இத்தகைய நிலையில்தான் CPI(M) ன் திரிப்புவாத நிலைபாட்டை எதிர்த்தும் வர்க்க சமரசப் பாதையை எதிர்த்தும் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தனர்.
 CPI(ML) உருவாக்கம்
Cpi(m) கட்சிக்குள் போராடிய புரட்சியாளர்கள் நவீன திரிப்புவாதத்திற்கு எதிராகவும், அக்கட்சி வர்க்கப் போராட்டத்திற்க்கு இழைத்த துரோகத்திற்க்கு எதிராகவும் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டுவதற்க்குப் போராடினார்கள். அவ்வாறு போராடிய புரட்சியாளர்கள் பல குழுக்களாக இருந்து போராடினார்கள். புரட்சிகரப் போராட்டத்தை தொடரும் விதமாக 1967 தேர்தலைப் புறக்கணிக்குமாறு புரட்சியாளர்கள் அறைகூவல் விட்டனர், ஆனால் CPI(M) ஓடுகாலியான CPI யுடனும் பிற பிற்போக்கு முதலாளித்துவக் கட்சியுடனும் காங்கிரசை தோற்க்கடிப்பது என்று அய்க்கிய முன்னனி கட்டிவெற்றி பெற்ற கையோடு கிசான் சபாவின் (தன் அமைப்பான) கோரிக்கையான நில சீர்திருத்த கொள்கையைகூட நடைமுறைபடுத்த மறுத்துவிட்டன.

7வது காங்கிரசிற்க்கு பிறகு CPI(M) கட்சிக்குள்ளேயே இருந்த பொதுவுடைமைப் புரட்சியாளர்கள் CPI(M)  துரோகத்திற்க்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினர். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் மற்றும் பிற மிகவும் முக்கியமான மக்கள் பிரச்சினைகளை கைவிட்டன, பாராளுமன்ற பாதையை சட்டவாத அடிப்படையில் அனுகி கட்சியை சீரழிவு பாதையில் எடுத்து சென்றனர்,

Published on 30/06/2016
CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் நேற்றைய தொடர்ச்சி...
CPI மற்றும் CPI(M) யின் திருத்தல்வாதங்களை பற்றி பார்த்தோம். அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி நந்தா CPI(M) புரட்சிபாதையில் பயணித்து விட்டது ஆம் வன்முறைபாதையை தேர்ந்தெடுத்துவிட்டது என்று
கூரிய வார்த்தையை சரிகட்ட கட்சியின் பொதுசெயலர் சுந்தரய்யா நந்தாவை சந்திக்க டெல்லி அனுப்பிவைக்கப் பட்டார், CPI(M) தாங்கள் ஆயுதப் போராட்டம் எதுவும் சிந்தித்துகூடப் பார்க்கவில்லை என்றும்சட்டரீதியாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவதுடன்மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற முழக்கத்தை மட்டுமே வைத்திருப்பதாகவும் விளக்கி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களை மயக்குவதற்க்கு பேசப்பட்ட வீரவசனங்கள் புதுடெல்லியில் உள்ள எஜமானர்களின் முன்பு வெறும் முனகல்களாக மாறின !
கம்யூனிசம் என்பது
துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வும்
மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக
பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு,
ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்ட்தாய் இருக்கிறது.
பாவ புண்ணிய்க் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முட்ங்கி விடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடைகளைக் கண்டடைவதா?
அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்சியமே வேறில்லை- தோழர் பாரதிநாதனின் கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் அடிகோலில் இருந்து.
நாளை தொடர்வேன்.....
CPI, CPI(M) தோழர்கள் பதில் தெரிவிக்காமையால் நீண்ட பதிவிடாமல் சிறிதாகவே பதிவிட்டுள்ளேன். இத்தொடர் இந்திய மா-லெ இயக்க வரலாற்றுடன் தனித்து செயல்படும் குழுக்கள் அவை முன் வைக்கும் கோட்பாடுகள் எல்லாம் தெரிவிப்பேன். முயற்சிக்கிறேன் சரியான உண்மையான நிகழ்வுகளை பதிவிட தவறை சுட்டி காட்டலாம்... தோழமையுடன் தொடருவோம்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்: CPC 01/07/2016
தோழர்களே நான் இத்தொடரை இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறேன், சில தொழர்கள் நினைக்கலாம் தேவையற்றவையாக, ஆனால் இன்றைய பாசிச நிலையை முன் அறிந்த கம்யூனிஸ்ட்கள் செயலாற்றாமையே ஆம் அரசில் பங்கேற்று கொண்டே பாசிச வளர்ச்சிக்கு மறைமுகமாக பயன்பட்டுள்ளனர்.  (இதனை பின்னர் பார்க்கலாம்).
இரண்டாம் உலகப்போரால் மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை துக்கி எறிய இந்திய மக்களின் நிலைஎரிமலையின் விளிம்பில்எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. 150 போலிசு இராணுவ வாகனங்கள் தீக்கிறையாக்கபட்டன. துப்பாக்கி குண்டைகண்டு அஞ்சாமல் மக்கள் போரிட்டதை குறிப்பிட்டுள்ள வைசிராய் இனி இந்தியரை கட்டுபடுத்த முடியாது என்பதனை தெள்ளதெளிவாக எழுதியுள்ளார். பல நூறுபேர் கொல்லபட்டனர் 1 அமெரிக்கர் உட்பட 33 பேர் கொல்லபட்டதாகவும் 200 பொது மக்களும் 70 ஆங்கிலப் படைவீர்ர்களும் 37 அமெரிக்கப் படைவீர்ர்களும் படுகாயம்பட்ட தாகவும் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர் ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற்படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படைவீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.இராணுவப்படை வீரர்கள் சுடமறுத்து ஆங்கிலேய படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இன்று மதம் அரசாள்கிறது இந்த பாசிஸ்ட்கள் நினைவில் கொள்ளட்டும் அன்று போரட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை பிரிக்க இந்து முஸ்லீம் மதவாத சிந்தனை எடுபடவில்லை, வீரர்கள் தோலோடு தோல் கொடுத்து போரிட்டனர். மக்கள் தன்னிச்சையாக முன்வந்து வீரர்களுக்கு உதவினர், போராட்டத்தை ஓடுக்க கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்ற பின்தான் வீதிகள் ஆங்கிலேய படை கைவசமாயின- இங்கே ஒவ்வொரு கட்சியின் நிலைபாட்டையும் கணக்கில் கொளல் வேண்டும்.(1919 ல் ஜாலியன்வாலா பாக்கில் ஜெனரல் டைரின் வார்த்தையில் குண்டு தீர்ந்துவிட்டதால் சுடுவதை நிறுத்தினோம்) இங்கே வீதியில் உள்ள எல்லோரும் சுட்டு கொல்லபட்ட பின் சுடுவதை நிறுத்தினர். எந்த மதவாதத்திற்க்கும் மயங்காத கடல்படை வீரர்கள் சரண் அடைவதைவிட வீர மரணத்தை வரவேற்றனர்.
இவை விரிவான வரலாறு இதனை விவரிக்கும் முன்
தோழர் லெனின் செயல்தந்திரத்தின் வரையறையை பார்ப்போம்:-
செயல்தந்திரம் பற்றிய கேள்வியானது கட்சியின் அரசியல் நடத்தையைப் பற்றிய கேள்வியாகும். நடத்தை வழியானது கோட்பாடு, வரலாற்றுக் குறிப்புக்கள், அரசியல் சூழ்நிலை முழுவதையும் பகுப்பாய்வு செய்தல், இன்ன பிறவற்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். (லெ.நூ. தி. 9..26)
நிகழ்வுகளுக்குப் பின்னால் ஸ்தம்பித்து நிற்கின்ற, நிகழ்வுகள் தோன்றிய பிறகு அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்கிற செயல்தந்திர முழக்கங்களைக் கொள்வதன் மூலம், நாம் திருப்தி அடைந்து கொள்ளமுடியாது. நம்மை முன்நோக்கி அழைத்துச் செல்கிற, நமக்கு முன்னால் உள்ள பாதையை ஒளியூட்டிக் காட்டக் கூடிய, இயக்கத்தின் உடனடிக் கடமையில் இருந்து நம்மை மேலே உயர்த்துகிற செயல்தந்திர முழக்கங்களை நாம் கொண்டிருக்க வேண்டும்.
நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; அது செயலுக்கான வழிகாட்டி: என்று தோழர் எங்கெல்ஸ் தன்னையும் தன் புகழ்வாய்ந்த நண்பரையும் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
ஏனெனில் மார்க்சியம் என்பது உயிர்த்துடிப்புள்ள தத்துவமாகும். அதன் பல்வேறு வகையான பார்வைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
(
லெ.நூ..தி.17, பக் 39-41)
மார்க்சியம் நம்மைச் சரியான விதத்திலும், புறவயமாகவும் வர்க்க உறவுகளைப் பற்றியும், ஒவ்வொரு வரலாற்றுச் சூழலின் கறாரான, விஷேட குணாம்சங்களையும் சோதித்தறிய, பகுப்பாய்வு செய்யுமாறு கோருகிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாம், கொள்கைக்கு விஞ்ஞான அடிப்படையைக் கொடுக்கக் கூடிய மிகவும் முக்கியமான இந்தக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த எப்போதும் முயன்று இருக்கிறோம். “நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; ஒரு செயலுக்கான வழிகாட்டியாகும்என்று மார்க்சும், எங்கெல்சும் எப்போதும் கூறிவந்ததுடன்விதிகளை மனனம் செயவதும், அதைத் திரும்பத்திரும்பக் கூறுவதும் பொதுவான கடமைகளைப் பற்றிக் கூறுவதற்கே தகுதியுள்ளதுஎன்று சரியான விதத்தில் பரிகசித்துள்ளனர். தத்துவமானது வரலாற்று நிகழ்வின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளாதார அரசியல் நிபந்தனைகளுக் கேற்றாற் போன்று அவசியமானதாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.(லெனின், செயல்தந்திரம் பற்றிய கடிதங்கள், முதல் கடிதம்)
நாளை மற்றவை தொடருவேன்.....
 

No comments:

Post a Comment