Thursday 25 August 2016

CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில் மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை -cp



CPI, CPM  (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்

 மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை -cp

1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம்போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மா-லெ இயக்கங்களுக்குள்ளும்  பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மா-லெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மா-லெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான்.கிட்டதட்ட அய்ம்பதாம் ஆண்டை நெருங்கப் போகிற மா-லெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வள்ர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில், ரஸ்சிய புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திர்த்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடினார். அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு முறியடித்தார் என்பதை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யம் நமக்கு சுட்டிகாட்டுகிறது.

முதலாளித்துவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகின்றதென்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது, ஒட்டு மொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மா-லெ புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சினைக்கான போரட்டத்தில்கூட ஒன்றினைந்து செயல்பட முடியாமல் போனதற்க்கு காரணம் என்ன?

சமூக மாற்றம், புரட்சியும்,மார்க்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்தல்லவே, நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது.  நாடோ வலது அரசியலை நோக்கி திருப்பட்டுள்ளது அதனை ஒட்டி அனைத்து பிழைப்புவாத கட்சிகளும் ஒருங்கிணைந்துகொண்டுள்ளது.

மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை லெனின்யம் வரையறுத்துள்ளது. லெனின் அவர்கள் சொன்னது போல் சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான், அதைக் குணப்ப்டுத்திக் கொண்டிருக்க வேண்டுமாயின் புரட்சியாளர்கள் நீடித்த ஒற்றுமையும், அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அந்த நோய்க்கு மருந்தாகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

No comments:

Post a Comment